இயக்குனர் சங்கர் தற்போது விக்ரம் நடிப்பில் ‘ஐ’ படத்தை இயக்கிவருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டப்பிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சங்கர். ஒரு பக்கம் பிரம்மாண்டமாக படம் இயக்கி வந்தாலும் மறுபக்கம் படங்கள் தயாரித்து வெளியிட்டும் வருகிறார்.
தற்போது சங்கரின் உதவியாளர் கார்த்திக் ‘கப்பல்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை பார்த்த சங்கர், கப்பல் படம் சிரிப்பு கலவரமாக அமைந்துள்ளது என்றும், துவக்கம் முதல் படம் முடியும் வரை பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
கப்பல் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கூடிய விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

0 comments:
Post a Comment