Friday, 10 October 2014

Tagged Under: , ,

யாவும் வசப்படும் - பதிக்கும் வெற்றித்தடம் - திரைவிமர்சனம்..!

By: ram On: 17:21
  • Share The Gag
  • மண் என்ற முழு நீள படத்தை கொடுத்த இயக்குனர் புதியவன் ராசைய்யவின் அடுத்த படைப்பு யாவும் வசப்படும்.

    முழுக்க முழுக்க லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களால் உருவான இப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கரு என்னவென்ற பார்த்தோமானால் இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக எந்த அளவு கடத்தல், கொள்ளை, போதை பொருள் என்று உலகம் முழுவதும் விஷ கிருமி போல பரவி யுள்ள சம்பவங்களைத்தான் அடிப்படையாக வைத்து அதில் சினிமாவுக்கு தேவையான எல்லா அம்சங்களும் சேர்த்து ஒரு கிரைம் த்ரில்லர் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

    என்ன கதை

    ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட நாச வேலைகளை பணக்கார வேஷத்தில் செய்யும் ஒரு வில்லன், அவனுடன் அடியாட்களாக வேலை செய்யும் ராம் மற்றும் திவா என்ற முக்கிய கதபாத்திரம். இவர்களுக்கு வில்லனிடம் இருந்து ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதாவது லோண்டில் வாழும் மிகப்பெரிய கோடிஸ்வரனின் பெண்ணை கடத்த வேண்டும் என்று, அதன் படி இவர்களும் அப்பெண்ணை கடத்தி ஒரு பங்களாவில் அடைத்து வைக்கின்றனர். அதன் பிறகு வழக்கம் போல் கடத்திய பெண்ணின் அப்பாவுக்கு போன் போட்டு உன் பொண்ணை கடத்திவிட்டோம் எங்களுக்கு 30 கோடி கொடுத்தால் விட்டு விடுவோம் என்ற மிரட்டுகின்றனர். அவரும் சம்மதிக்க திடிரென்று ஒரு மாஸ்டர் பிளான் போடுகின்றார் ராம் மற்றும் திவா. பேசாம பணத்த பாஸ்கிட்ட கொடுக்காம நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகின்றனர்.

    இந்த நேரத்தில் தான் படத்தில் ஒரு ட்விஸ்ட் , இரண்டு அடியாட்களில் ஒருவரான திவா வெளியே போகும் சமயத்தில், ராமை ஏமாற்றிவிட்டு தில்மி தப்பிக்க முயற்சிக்கிறார், அந்த நேரத்தில் தான் தில்மிக்கு முகமூடி அணிந்து தன்னை கடத்தியது தனது காதலன் ராம் என்பது தெரிய வருகிறது, என்ன செய்வது என்று ராம் தவிக்கும் போது திவாவை ஏமாற்றிவிட்டு பணத்துடன் நாம் இந்தியாவுக்கு சென்று விடலாம் என்று தில்மியிடம் ராம் சொல்லி மயக்குகிறான், ஆனால் அதை கேட்டுக்கொண்ட தில்மி, ராமிடம் இருந்து தப்பிக்கும் சமயத்தில் அந்த உண்மையை திவாவிடம் சொல்லி விடுகிறார்.

    இதை தெரிந்துவுடன் திவாக்கு கோபம் வர பணத்தை அள்ளி கொண்டு ராமை போட்டு தள்ளிடலாம் என்று திட்டமிடுகிறான், அதே நேரத்தில் திவாவிடம் இருந்து பணத்தை பறிக்க வேறு சிலரும் திட்டம் போட, இறுதியில் அந்த பணம் யார் கைக்கு போனது, ராமும், திவாவும் என்ன ஆனார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

    நடிகர் நடிகர்களின் பங்களிப்பு

    படத்தில் சொல்லும் படி எந்த ஒரு தெரிந்த முகமும் இல்லை என்றாலும் அந்த குறை இல்லாமல் நடித்துள்ளனர். புதுமுகங்களும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக திவாக நடித்திருக்கும் கதாபாத்திரம் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பில் படம் பார்ப்பவர்களை கூட மிரட்டுகிறார். நாயகி தில்மி, கொழுக் மொழுக் என்று மூன்று குஷ்புவை சேர்த்து செஞ்சது போல இருக்கிறார்.

    பலம்

    1.படத்தின் ஒளிப்பதிவு அக்ஷன் கதைக்கே உண்டான பாணியில் கேமரா கோணத்தை வைத்து பிரேமை அழகு படுத்துகிறார். அதுவும் லண்டனில் இதுவரை பார்க்காத தடங்களிலும் படம் படித்திருப்பது அருமை.

    2. சில இடங்களில் போர் அடிக்கிற மாதிரி தெரிந்தவுடன் அடுத்து விறுவிறுப்பான காட்சியை மாற்றி திரைக்கதையில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசய்யா.

    பலவீனம்

    1. பின்னணி இசை மற்றும் பாடல்கள் சொல்லும் படி இல்லாதது கொஞ்சம் வருத்தம்.

    2. ராம் கதாபாத்திரம் அவ்வளவு இயல்பாக இல்லாமல் நடிப்பாகவே தெரிந்தது.

    ஆட்கடத்தல் பற்றி அவ்வளவு யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்த இயக்குனர் புதியவன் ராசய்யாவுக்கு பாராட்டுக்கள்

    மொத்தத்தில் யாவும் வசப்படும் - பதிக்கும் வெற்றித்தடம்

    0 comments:

    Post a Comment