Thursday, 11 September 2014

Tagged Under: ,

முருகன் மந்திரம் எழுதிய “ஃபேஸ்புக்” பாடல்..நான் மொக்க POSTu போட்டாலும், TEN THOUSAND SHAREu தாண்டுதுங்க! –

By: ram On: 08:18
  • Share The Gag
  • ‘உ’ படத்தில் இடம்பெற்ற திக்கித் தெணறுது தேவதை பாடலின் வரிகளுக்காக பரவலான பாராட்டை பெற்ற பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்போது “திருட்டு விசிடி” படத்தில் எழுதியுள்ள ஃபேஸ்புக் பாடலின் வரிகளுக்காகவும் படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளிக்கொண்டாராம். வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு பாட்டு எழுதவேண்டும் என்பது, எல்லா பாடலாசிரியர்களுக்குமே எப்போதும் விருப்பமான ஒன்று. அப்படி ஒரு வித்தியாசமான சூழலுக்கு பாட்டு எழுத கிடைத்த வாய்ப்பை பற்றி முருகன் மந்திரம் விவரிக்கிறார்,

    “காதல்” சுகுமார் சார், இயக்குநராக அறிமுகமாகிற படம் “திருட்டு விசிடி”. படத்தின் பெயரைக்கேட்ட உடனே, “அட”, அப்டின்னு ஒரு ஆச்சர்யம் வந்தது. எனக்கு இந்த டைட்டிலை முதன்முதலா சொன்னப்போ டிசைனாவே காட்டினார் சுகுமார் சார். அப்பவே இந்தப்படம் கண்டிப்பா பேசப்படும்னு தோணிச்சு. அப்புறம் பாட்டுக்கான சூழலை சொன்னார். இந்தப்படத்துல இடம் பெறுகிறது ஒரு குத்துப்பாட்டு அது. ஒரு பிரமாதமான அழகி, அவளைச் சுத்திச் சுத்தி வருகிற ஆம்பளைங்க கூட்டத்தைப் பற்றியும், ஆம்பளைங்க மத்தியில அவளுக்கு இருக்கிற மாஸ் பற்றியும் கெத்தா பாடுறா. இதுதான் சூழல். ஜித்தின் ரோஷன்னு அறிமுக இசையமைப்பாளர், ட்ரெண்டியா ட்யூன் போட்டிருந்தார். இன்றைய தேதிக்கு சோசியல் வெப்சைட்ஸ் தான் பாப்புலர், அதனால் அதை வச்சே எழுதலாம்னு சொன்னார் சுகுமார் சார். அப்டித்தான் இந்த ஃபேஸ்புக் பாட்டு உருவாச்சு. பல்லவி

    என் FACEBOOK FACEBOOK பக்கத்திலே
    தினம் நட்பின் அழைப்புகள் குவியுதுங்க
    நான் LOG IN பண்ணும் நேரத்திலே
    அட TWITTER SERVER தெணறுதுங்க

    நான் மொக்க POSTu போட்டாலும்
    TEN THOUSAND SHAREu தாண்டுதுங்க
    எங்க ஆயா PHOTO போட்டாலும்
    ஒரு இலட்சம் பேரு லைக்-றாங்க

    நான் குட்மார்னிங் சொன்னாலே
    ஒரு கூட்டம் SUPER என்கிறதே
    என் FOLLOWERS LIST-டினிலே
    ஓபாமா தான்

    இப்படி பாட்டோட பல்லவி வரிகள் மட்டுமில்லாம, இரண்டு சரணங்களும் ரொம்ப பல்லவியைப்போலவே அழகா வந்திருக்கு. பாட்டை சுசித்ரா மேடம் பாடுனதுக்கு அப்புறம் பாட்டு இன்னும் ட்ரெண்டியா, கலர்ஃபுல்லா மாறிடுச்சு. இப்படி ஒரு பாடல் எழுத காரணமா இருந்த திருட்டு விசிடி படத்தின் இயக்குநர் காதல் சுகுமார் சார், கதாநாயன் மற்றும் தயாரிப்பாளர் பிரபா மற்றும் இசையமைப்பாளர் ஜித்தின் ரோஷனுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    0 comments:

    Post a Comment