Thursday, 11 September 2014

Tagged Under:

கல்யாணத்திற்கு முன்னர் ஜோடியாக வாழலாமம் தப்பு இல்லையாம் .

By: ram On: 19:08
  • Share The Gag
  • பொதுவாக லிவ்-இன் வாழ்க்கையை மேற்கொள்ளும் பழக்கமானது வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு வந்தது. இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால், நிச்சயம் கடுமையான மன வேதனையை சந்திக்கக்கூடும்.

    இங்கு திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கையை வாழ்வதால் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். லிவ்-இன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சூப்பராக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவருக்குள் இருந்த ஒருவித உற்சாகமானது குறைந்துவிடும்.

    இதனால் சில சமயங்களில் திருமணத்தின் போது இருக்க வேண்டிய உற்சாகம் கூட குறைந்துவிடும். இதுவரை இருவருக்குள் இல்லாத பணப்பிரச்சனைகள் லிவ்-இன் வாழ்க்கையின் போது ஏற்படக்கூடும். இதனை பலர் மறுத்தாலும், ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை சந்திக்கும் நிலை வரும்.

    திருமணத்திற்கு முன்னரே லிவ்-இன் வாழ்க்கையை வாழும் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதன் மூலம், இருவருக்குள் அன்பானது அளவுக்கு அதிகமாகிவிடும். இப்படி ஒரு உறவில் அன்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால், நாளடைவில் சண்டைகள் அதிகரித்து, பிரிவுகள் கூட ஏற்படக்கூடும்.

    திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கையை வாழும் போது, துணையின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியும். அப்போது ஒருவேளை நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலே சந்தேகம் எழ ஆரம்பித்து, பின் அது பெரிய சண்டையாகி, திருமணத்திற்கு முன்னரே பிரியக்கூடும்.

    0 comments:

    Post a Comment