Saturday, 6 September 2014

Tagged Under: ,

கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாள் கோயில் பக்தர்கள்!

By: ram On: 10:15
  • Share The Gag
  • உத்தமவில்லனைத் தொடர்ந்து கமல் நடித்து வரும் படம் பாபநாசம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கெளதமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடக்கிறது. கதைப்படி ஒரு பெருமாள் கோயில் தேவைப்பட்டதால், சமீபத்தில் தான் நாங்குநேரி பகுதியில் உள்ள ஜீயர் சாமிகளை சந்தித்து அங்குள்ள பெருமாள் கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டார் கமல்.

    அதையடுத்து, கடந்த சில தினங்களாக அந்த பெருமாள் கோயிலில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஆனால், 108 வைணவ தலங்களில் ஒன்றான அந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் யாரும் சட்டை அணிந்து உள்ளே செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறதாம். கோயில் வாசலுக்கு சென்றதும் சட்டையை கழற்றி விட்டு, சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பிறகு சட்டை அணிந்து கொள்ள

    வேண்டுமாம்.

    ஆனால், கமல் அந்த கோயிலுக்குள் சட்டை அணிந்து கொண்டே சென்றதோடு, சட்டை அணிந்து கொண்டே நடித்தாராம். இதனால் நீண்டகாலமாக பக்தர்கள் கடைபிடித்து வரும் கட்டுப்பாட்டை கமல் மீறி விட்டார் என்று பெருவாரியான பக்தர்கள் குற்றம் சாட்டி வருகிறார்களாம். இருப்பினும், கதைக்கு சட்டை அணிந்துதான் நடிக்க வேண்டியுள்ளது என்பதை அவர்களிடம் விளக்கி, தொடர்ந்து அப்படி நடித்து வருகிறாராம் கமல்.

    0 comments:

    Post a Comment