தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த படம் 'வேலையில்லா பட்டதாரி'. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது.
இப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட பலர் தனுஷை அணுகியும் தனுஷ் மறுத்துவிட்டாராம். படத்தை இந்தியில் டப்பிங் செய்ய விரும்பாத தனுஷ் 'வேலையில்லா பட்டதாரி' படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம்.

தற்போது பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்துவரும் தனுஷ், அதை முடித்துவிட்டு இந்தி 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடிப்பாராம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment