இயக்குனர் லிங்குசாமி, அனுஷ்காவின் தீவிர ரசிகர் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. சமீபத்தில் நடந்த அஞ்சான் பாடல் வெளியீட்டு விழாவில் அதனை அவரே தன் வாயால் ஒத்துக்கொண்டார்.
ரொமான்டிக் பாடல்களை கேட்கும் போது எனக்கு அனுஷ்கா ஞாபகம் தான் வரும் என்று கூறினார்.
தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாகும் அஞ்சான், பாடல்கள் இரு தினங்களுக்கு முன்பு தான் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் நாகார்ஜுனா, ராஜமௌலி என பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சூர்யா, தான் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும், அவர் இப்போது அனுஷ்காவை வைத்து இயக்கி கொண்டிருக்கும் "மஹாபலி" படத்தில், ஏதாவது ஒரு கதாபாத்திரம் இருந்தால் தன்னை அதில் நடிக்க வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இடையில் பேசிய லிங்குசாமி, அவர் அனுஷ்காவின் தீவிர ரசிகர் என்றும், தன்னை அனுஷ்காவுடன் குறைந்தபட்சம் ஒரு சீனிலாவது நடிக்க வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
0 comments:
Post a Comment