கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் குறித்த தகவல்களை ரகசியமாக பாதுகாக்கிறது படக்குழு. அஜீத் நடிக்கிறார், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கிறார்கள் என்பதற்கு மேல் எந்தத் தகவலும் பெயரவில்லை.
லிங்கா படத்தில் அனுஷ்கா பிஸியாக இருந்த நேரத்தில் த்ரிஷா, அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த காட்சிகளின் போது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் இல்லாமல் சாதாரண கருப்புநிற ஹேர் ஸ்டைலுடன் அஜீத் நடித்தார். த்ரிஷாவுடனான அவரது காட்சிகள் படத்தின் பிளாஷ்பேக்கில் வருவதாக கூறப்படுகிறது.

கௌதமின் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க தாமரை பாடல்களை எழுதுகிறார்.
0 comments:
Post a Comment