ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹூபலி' படத்தில் ஒரு காட்சியிலாவது தான் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தயாரித்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். யு.டிவி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
'அஞ்சான்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'SIKINDER' இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சூர்யா, சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, நாகார்ஜுன், இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் பேசிய சூர்யா, "ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தவறு செய்வார்கள். இயக்குநர் ராஜமெளலி படத்தில் நடிக்க முடியாமல் போனது எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர். அவர் எப்போது அழைத்தாலும் அவருடைய படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போது இயக்கி வரும் 'பாஹூபாலி' படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கொரு வாய்ப்பு அளிப்பார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment