உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படத்துறையில் ஒரு பட்டிமன்றம் தொடங்கி உள்ளது. கமலின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் உத்தமவில்லனா? விஸ்வரூபடம் -2 படமா? காரணம் உத்தமவில்லன் படத்தைப் போலவே விஸ்வரூபடம் -2 படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து மற்ற வேலைகள் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது. காரணம் அப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிசந்திரன் வாக்கு கொடுத்தபடி பணத்தைக் கொடுக்கவில்லை. எனவே அந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு உத்தமவில்லன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கமல்.
தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை 'விஸ்வரூபம் 2' படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். 'விஸ்வரூபடம் 2' படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் பணிகள் முடிக்க வேண்டி இருப்பதால், அதற்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கமல் தரப்பில் கூறப்படுகிறது. அதனால்தான் 'விஸ்வரூபடம் 2' படத்திற்கு முன்னதாக, 'உத்தம வில்லன்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டராம். இதற்கிடையில் தன்னுடைய விஸ்வரூபடம் -2 படத்தை முதலில் ரிலீஸ் பண்ணிய பிறகே உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்கிறாராம் ரவிசந்திரன்.
0 comments:
Post a Comment