நாய் மனுசன கடிச்சா செய்தியில்ல; ஆனா ஒரு மனுசன் நாய கடிச்சா தான் செய்தினு உங்க தாத்தாவோ, அடுத்த வீட்டு ஆத்தாவோ இல்ல வேற யாராவது சொல்லி நீங்க கேட்டு இருக்கலாம். ஆனா ஒரு நாய் 65 பேர கடிச்சா? அது நியூஸ் தான்...
அவிங்க நம்மள கடிச்சா, நாம திரும்ப அவிங்கள கடிக்கவும் முடியாது, அடிக்கவும் முடியாது. தொட்டா ப்ளூ-க்ராஸ் வந்து புசுக்குனு தூக்கிட்டு போயிடும். ஸோ, இந்த டாக்கீஸ் கிட்ட இருந்து தப்பிக்க முத்தான பத்து யோசனைகள்...
1. வாராவாரம் பைரவரை வழிபடலாம்.
2. மணி, டாமி, ஜிம்மினு வழக்கமான பெயரையே வைக்காம அர்னால்டு, ஜெட்லீ, அன்டர்டேக்கர்னு வித்தியாசமா பேர் வச்சு அவிங்கள மகிழ்விக்கலாம்.
3. அம்மா உணகவங்களில் பெடிக்ரி போட வேண்டும் என போராட்டம் செய்து டாக்கீஸ் மனதை குளிர்விக்கலாம்.
4. தப்பு செய்றவங்களை, நாயேனு திட்றத தவிர்த்து, பாராட்டு விழாக்களில் நாயுள்ளம் கொண்டவரே, அஞ்சா நாயேனு பாராட்டுக்கு உரியவர்களை பாராட்டி நாய்கள் மத்தியில் நற்பெயர் வாங்கலாம்.
5. நாய்கள பத்தி உயர்வா சொல்ற திரைப்படங்களுக்கு வரிவிலக்கு செய்யனும்னு மனு எழுதி போடலாம்.
6. மார்கழி மாசம் வந்ததும், மாங்கா அடிக்க போர மாதிரி கையில கல்லோட திரியுறத நிறுத்தலாம்.
7. உங்க ஏரியா டாக்கீஸ்க்கு பிடிக்காத கலர்ல ட்ரஸ் போடுறத தவிர்க்கலாம்.
8. ஏரியால ஒரு நாய், குட்டி போட்டுச்சுனா அந்த குட்டிகள்ல ஹன்சிகா மாதிரி நல்லா கொளுக்கு, மொளுக்குனு இருக்கிற குட்டிய மட்டும் தூக்கிட்டு வந்து ஒன்றரை ரூபா சடம்பு கயிறுல கட்டி போட்டு பல் கூட மொலைக்காத அதுக்கு பக்கோடா போடுவதை நிறுத்தலாம்.
9. பசின்னு நம்ம கிட்ட வந்து வாலாட்டுனா வெறும் 'பன்' மட்டும் கொடுத்து, துரத்திவிடாம புதுசா ஓரியோ, டார்க் ஃபேன்டசினு ட்ரை பன்னலாம்.
10. இது எதுவும் முடியலேனா இந்த மாதிரி ஆர்டிக்கல் எழுதி நாய்களிடம் நல்ல பேர் வாங்கலாம்.
0 comments:
Post a Comment