வில்லன் நடிகராக அறிமுகமாகி ஹெரொவானவர்களில் சரத்குமாரும் ஒருவர். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு ஆக்ஷன் ஹீரோவான இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
ஏ.வெங்கடேஷ், இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் 'சண்டமாருதம்'. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சரத்குமார், வழக்கமான அண்ணன்-தம்பி, அப்பா-மகன் என்று இல்லாமல், ஒரு வெறு வித்தியாசமான வில்லன் மற்றும் கதாநாயகன் வேடங்களை எற்றுக்கிறார்.
இப்படத்தின் கதையை சரத்குமார் எழுத, திரைக்கதை, வசனத்தை பிரபல க்ரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமார் எழுகிறார்.
“நான் பாக்கறதுக்குத்தான் வில்லன் ஆனா பக்கா ஹீரோ “ என வில்லனும், “நான் செய்வதில் எல்லாம் ஹீரோயிஷம் இருக்கும்“ என கதாநாயகனும், தனித்தனி கொள்கையுடன் மோதும் ஒரு வித்தியாசமான திரைப்படம் இந்த 'சண்டமாருதம்' இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீராநந்தன் என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் சமுத்திரக்கனி ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ராதாரவி, தம்பிராமையா, இமான் அண்ணாச்சி, வெண்ணிறாடை மூர்த்தி, நரேஷ், ஆதவன், சிங்கம்புலி, ஜார்ஜ், நளினி, ராம்குமார், கானா உலகநாதன், டெல்லி கணேஷ், மோகன்ராமன், காதல் தண்டபாணி, ரேகா சுரேஷ், ஜி.எம்.குமார், சூப்பர்குட் கண்ணன், பிரபாகர், நடேசன், செல்வராஜ், பாபூஸ், கராத்தேராஜா ஆகியோர் நடிக்க, முக்கிய வேடத்தில் புதுமுக வில்லனாக பெங்களூரை சேர்ந்த அருண்சாகர் அறிமுகமாகிறார்.
ஜெம்ஸ் வசந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மோகன்ராஜ், சுமதி ஸ்ரீ பாடல்கள் எழுதுகிறார்கள்.
மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பாக மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை ஆ.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment