Thursday, 14 August 2014

Tagged Under: ,

அஜித் கவரக்கூடியவர், விஜய் நகைச்சுவையாளர், சூர்யா கூர்மையானவர் - வித்யுத் ஜம்வால்..!

By: ram On: 07:49
  • Share The Gag

  •  அஜித் கவரக்கூடியவர், விஜய் நகைச்சுவையாளர் மற்றும் சூர்யா கூர்மையானவர் என மூவருடனும் நடித்த வித்யுத் ஜம்வால் கூறியுள்ளார்

    'துப்பாக்கி', 'பில்லா 2' ஆகிய படங்களில் விஜய், அஜித் நடித்த வித்யுத் ஜம்வால் தற்போது சூர்யாவோடு 'அஞ்சான்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

    அஜித், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்தவர், இப்படத்தில் சூர்யாவிற்கு நண்பராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரடு நடித்த அனுபவங்கள் குறித்து வித்யுத் ஜம்வால் "அவர்கள் முன்னணி நட்சத்திரங்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் அவர்களிடையே பொதுவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பண்புகள் உள்ளன. அதுதான் அவர்களது தனித்துவம். அதுதான் அவர்களை இவ்வளவு பெரிய நட்சத்திரமாக்கியுள்ளது" என்றார்

    மேலும், "அஜித் அவர்கள் உங்களை கவர தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இயல்பிலேயே கவரக்கூடியவர். விஜய் மிகவும் அமைதியானவர் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அவர் ஒருவருடன் நெருக்கமானால், அவரைப் போல நகைச்சுவையாளர் எவரும் இல்லை. தொடர்ந்து ஜோக்குகள் சொல்லி, மகிழ்விப்பார். சூர்யாவின் கண்களில் அவ்வளவு கூர்மை இருக்கும். அதே தீவிரத்துடன் நடிக்கவும் செய்வார் " என்று மூவரைப் பற்றியும் தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment