Sunday, 24 August 2014

Tagged Under: ,

18 வயது பூர்த்தியாகாத நடிகைகளுக்கெதிரான வழக்கு ..

By: ram On: 07:45
  • Share The Gag

  • தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி , சினிமாவில், 18வயதுக்கு கீழுள்ள பெண்கள் நாயகியாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை சென்னை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    முத்துசெல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சினிமாவில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை நாயகியாக நடிக்க வைக்கின்றனர்.

    சின்ன வயதில் அவர்களது மனம் பக்குவப்படாமல் இருக்கும் சூழலில் சினிமாவில் நடிப்பதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் கொடுமைக்கும் ஆளாகுகின்றனர்.

    சமீபகாலமாக சந்தியா, கார்த்திகா, லட்சுமி மேனன், துளசி போன்றோர் 18 வயதை பூர்த்தியாகாதவர்களை நடிக்க வைப்பது நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும்.

    எனவே, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சினிமாவில், நாயகியாக நடிக்க வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முத்துசெல்வி தனது மனுவில் கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இலட்சியம், கனவு, தாங்கள் என்ன ஆக வேண்டும் என ஆசை இருக்கும்.

    அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதற்காக பொதுநல வழக்கும் தொடர முடியாது, எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டனர்.

    0 comments:

    Post a Comment