கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமான 'தல 55' படத்தின் படப்பிடிப்புகள் மிக விரைவாக நடந்து வரும் நிலையில் தற்போது அஜித், த்ரிஷா நடிக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அஜித், த்ரிஷா கணவன் மனைவியாக நடித்து வரும் இந்த காட்சிகளில் அஜித் யூத் லுக்கில் படு ஸ்டைலாக இருப்பார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரின் மகளாக பிரபல மலையாள குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்து வருகிறார்.
அனைவரது எதிர்பார்ப்புக்கும் உரிய படத்தின் இந்த ஃபிளாஷ் பேக் காட்சியில் அஜித் - த்ரிஷாவின் பிரம்மாண்ட கல்யாணக் காட்சி இடம்பெறுகிறது.
இதற்கு முன்பு 'ஜி', 'கிரீடம்' ,'மங்காத்தா' என மூன்று படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் கூட இருவருக்கும் திருமணம் புரியும் காட்சிகள் இல்லை என்பதும், இதுதான் முதல் முறை என்பதும் மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
0 comments:
Post a Comment