Wednesday, 25 December 2013

Tagged Under: ,

'வீரம்' படத்துக்கு 'யூ' சான்றிதழ் : சந்தோஷத்தில் படக்குழு

By: ram On: 22:50
  • Share The Gag



  • 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'வீரம்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

    அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வீரம்'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, சிவா இயக்கியிருக்கிறார். விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

    ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்ததால், படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிந்ததால், படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள்.

    படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், எந்த ஒரு இடத்தையும் கட் செய்ய சொல்லாமல் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 'யூ' சான்றிதழ் கிடைத்ததால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு. அஜித்தும் இயக்குநர் சிவாவிற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.

    முதலில் படத்தின் சென்சார் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. வரிவிலக்கிற்கு திரையிட்டு காட்டுவது மட்டும் தான் பாக்கி. அதையும் விரைவில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    இன்னும் வெளியீட்டிற்கு 16 நாட்கள் இருப்பதால், படத்தின் டிரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு படத்தினை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

    சென்சார் சான்றிதழ்படி படம் 2:41:15 மணி நேரம் ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment