Saturday, 14 December 2013

Tagged Under: ,

மனம் மாறிய ஹீரோ!

By: ram On: 18:27
  • Share The Gag


  • சொந்த படம் தயாரிக்க பயந்த ஹீரோ, சினிமா அனுபவம் இல்லாதவர் படம் தயாரிப்பதை பார்த்து மனம் மாறினார். ராமன் அப்துல்லா, சூரி, வாணி மஹால், ஆச்சார்யா போன்ற படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். தற்போது புவனக்காடு படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் ரீ என்ட்ரிக்காக காத்திருந்தேன். அப்போது வி.எம்.மோகன் என்பவர் என்னை சந்தித்து புவனக்காடு படத்தில் நடிக்க கேட்டார். கதை கேட்டேன் பிடித்திருந்தது. யாரிடம் உதவி இயக்குனராக இருந்தீர்கள் என்றேன். யாரிடமும் உதவி இயக்குனராக இருந்ததில்லை, சினிமாவுக்கு நான் புதியவன் என்றார்.


    முன்னதாக சொந்த படம் தயாரிக்க வேண்டும் என்று நான் எண்ணியபோது பயமாக இருந்தது. சினிமாவில் சம்பாதித்ததை அதிலேயே விட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பிறகு, சினிமா பற்றியே தெரியாதவர் சினிமா தயாரிக்க முன்வந்திருக்கிறாரே என்று எண்ணியபோது நானும் மாறினேன். பூனை புலியாகிறது என்ற சொந்த படத்தை தயாரித்து முடித்துவிட்டேன்.


    சினிமா அனுபவமே இல்லாமல் படம் தயாரித்து இயக்கிய மோகனுக்கு தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. புவனக்காடு படத்தை பொறுத்தவரை அடர்ந்த காடுகளில் படமானது. திவ்யா நாகேஷ் ஹீரோயின். சரத்பிரியதேவ் இசை அமைக்க ரவிஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு விக்னேஷ் கூறினார்.

    0 comments:

    Post a Comment