Saturday, 14 December 2013

Tagged Under: , , ,

கிராமங்களை நோக்கித் தேடுங்கள்..?

By: ram On: 11:34
  • Share The Gag


  • கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத்லெட்டிக் வீரர்கள் நிறையக் கிடைப்பார்கள்.


    கிராமங்களை நோக்கித் தேடுங்கள். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு கொண்ட விஞ்ஞானிகள் நிறையக் கிடைப்பார்கள்.


    கிராமங்களை நோக்கித் தேடுங்கள். மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றும், அறிவியலில் சாதிக்கும் குழந்தைகள் நிறையக் கிடைப்பார்கள்.


    கிராமங்களை நோக்கித் தேடுங்கள். சிலம்பாட்டம் முதல் கரகாட்டம் வரையிலான தமிழர் கலைகள் இரத்தத்திலேயே ஊறிப்போன கலைஞர்கள் நிறையக் கிடைப்பார்கள்.


    என்று இந்த நாடு கிராமங்களை நோக்கி தேட ஆரம்பிக்கிறதோ..

    என்று இந்த நாடு கிராமங்களிலும் எல்லாம் இருக்கிறது என்பதை நம்புகிறதோ..

    என்று இந்த நாடு திறமையுள்ள எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ..


    அன்றே அறிவியல், கலை, விளையாட்டு என அத்தனை துறைகளிலும் இதுவரை இல்லாத மாபெரும் வளர்ச்சியைக் காண முடியும்.

    0 comments:

    Post a Comment