Thursday, 5 December 2013

Tagged Under: ,

டிசம்பரில் வெளியாகும் 14 படங்கள்!

By: ram On: 17:03
  • Share The Gag
  • 2013ம் ஆண்டில் ரிலீஸுக்குத் தயாராக கிட்டத்தட்ட 40 படங்கள் இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

    ஆனாலும், கடைசி மாதம் என்பதால் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று தீயாய் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி, இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 14 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

    டிசம்பர் 6ல் 'ஈகோ', 'கல்யாண சமையல் சாதம்', 'தகராறு', 'வெள்ளை தேசத்தின் இதயம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன. 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் பிரசன்னா- லேகாவாஷிங்டனும், 'தகராறு' படத்தில் அருள்நிதி- பூர்ணாவும் நடித்துள்ளனர்.

    டிசம்பர் 13ல் விக்ரம்பிரபு நடித்த 'இவன்வேற மாதிரி',  நித்யாமேனன் நடித்த 'மாலினி 22 பாளையங்கோட்டை', ஓவியா நடித்த 'மதயானைக்கூட்டம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.

    'எங்கேயும் எப்போதும்' சரவணன் 'இவன் வேற மாதிரி' படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரீப்ரியா 'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தை இயக்கி உள்ளார். 'ஆடுகளம்' படத்துக்கு வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் 'மதயானைக்கூட்டம்' படத்தை இயக்கி உள்ளார்.

    டிசம்பர் 20ல் கார்த்தி- ஹன்சிகா நடித்த 'பிரியாணி', ஜீவா, த்ரிஷா. ஆண்ட்ரியா நடித்த 'என்றென்றும் புன்னகை' படங்கள் வெளியாகின்றன. இதேநாளில் சேரன் இயக்கிய 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை',  பாலுமகேந்திரா இயக்கிய 'தலைமுறைகள்', மகேந்திரன் ஹீரோவாக நடித்த 'விழா' ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

    டிசம்பர் 27ல் விஜய் சேதுபதி நடித்த 'ரம்மி', கஞ்சா கருப்பு தயாரிப்பில் மகேஷ் நடித்த 'வேல்முருகன் போர்வெல்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.

    0 comments:

    Post a Comment