Tuesday, 22 October 2013

Tagged Under:

சென்னையில் நாளை முதல் மினி பஸ்கள்!

By: ram On: 17:12
  • Share The Gag
  • சென்னையில் 50 மினி பேருந்து, 610 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.



    22 - mini bus


    சென்னையில் பஸ் செல்ல முடியாத பகுதிகளில் மினி பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.


    இதை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக 50 மினி பஸ்கள் விடப்படுகின்றன.இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.


    இதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று 50 மினி பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் 610 புதிய பஸ்களையும் தொடங்கி வைப்பதுடன், அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் ரூ.257 கோடிக்கான காசோலையை வழங்குகிறார்.

    0 comments:

    Post a Comment