* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்.. * இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது.. அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்.. மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் . (அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க ) * புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று முதல் ஒரு மாசம் வர இருக்கும் மன அழுத்தத்தை புரிந்து எதிர்கொள்ள வேண்டும்..வீட்டில் செல்லமாக வளர்ந்த "குழந்தைகள்" ஜாக்கிரதை... ரூமுக்குள் அடைபட்டு கிடைக்காமல் முடிந்தவரை வெளியே இருந்தால் நல்லது.. குளிராக, வெயிலாக இருக்கும் பட்சத்தில் ரயில், பஸ்களில் பிரயாணிக்கலாம்.. * வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது தான் முதல் வேலை.. போன், இன்டர்நெட், காஸ், மின்சாரம் என்று பல இதை சார்ந்தே இருக்கும்.. மாணவர்களாக இருந்தால் உங்கள் கல்லூரியின் அடையாள அட்டை தேவை.. வேலை செய்யும் பட்சத்தில் இது ரொம்ப சுலபம்.. அவர்களே பார்த்துகொள்வார்கள்... * தயங்காமல் எந்தவொரு விஷயத்தையும் கேட்டு செய்யுங்கள்.. நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்தா காசு வீணாயிடும்.. ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும் காசு வீணாயிடும்.. டாக்சிக்களை தவிர்த்து அரசு வாகனங்களை பயன்படுத்துங்கள்.. * சக இந்தியர்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்.. சில பேரு அவங்க சொத்தை நீங்க எழுதி வாங்கிடுவீங்களோன்னு கண்டும்காணமா இருப்பாங்க.. ஆனா விடாதீங்க.. விஷயங்களை இயல்பாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. அவர்களை சந்திக்க சிறந்த இடம் பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு இடங்கள், (வேலை இடம், கல்லூரி தவிர).. உணவு, இருப்பிடம், உடை பற்றிய சிறந்த அறிவுரைகளை அவர்களை தவிர வேறு யாரும் தர முடியாது.. இந்திய காய்கறிகள், மசாலாக்கள் அநேகமாக எல்லா வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.. ஆனால் preservatives அதிகமாக இருப்பதால் சுவை மாறுபடும்.. * மேற்கத்திய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளில் மக்களிடையே technology acceptance ரொம்ப அதிகம்.. எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அங்கு 500 Mbps இன்டர்நெட் உபயோகிக்கிறார்... விலையும் அதிகமில்லை.. நல்ல இன்டர்நெட் இணைப்பு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மொக்கையாக வாங்கிவிட்டு.. contract இல் நுழைந்துவிட்டு சங்கடப்படாதீர்கள்... இந்தியாவிற்கு பேச இன்டர்நெட் கண்டிப்பாக தேவை... உங்கள் வீட்டிலும் இன்டர்நெட் கொடுத்து பெற்றோர்களுக்கு கற்றுகொடுப்பது ரொம்ப முக்கியம்.. டிவி இணைப்பும் (ADSL) பெரும்பாலும் சேர்ந்து வருவதால் டிவியும் வாங்கிடலாம்.. *பஸ், ரயில் என்று எங்கு சென்றாலும் ஸ்மார்ட்கார்டுகள் தான்..போக்குவரத்துக்கு சலுகை அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு விசேஷ சலுகைகள் உண்டு.. எல்லாமே நேரத்துக்கு நடப்பதால் தாமதமா வந்தால் தர்மசங்கடங்கள் நிச்சயம்... * வசிக்கும் நாட்டில் வரி பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்... சில சமயம் நம் நாடு திரும்பும்போது கட்டிய வரி பணத்தில் சிலதை திரும்ப பெறலாம்.. வளைகுடாவில் வரி கிடையாது * இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம்.. பல்லுக்கு தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.. இது இல்லையென்றால் தீட்டி விடுவார்கள்.. | |||
|
Tuesday, 22 October 2013
Tagged Under: பயனுள்ள தகவல்
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...
By:
ram
On: 19:38
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment