Tuesday, 22 October 2013

Tagged Under:

தண்ணீர் பாட்டிலில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

By: ram On: 23:52
  • Share The Gag
  • packaged-drinking-water-bottle-i13
    மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம். 



    அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன?
    மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போமா.


    பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள் இன்னும் இருந்தால், மீண்டும் இந்த செயலை தொடர்ந்து செய்யுங்கள்.
     
     

    அழுக்குகள் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 30-45 நிமிடம் ஊற வைத்தால், அரிசியானது பாட்டிலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். பேக்கிங் சோடா கிருமிகளை அழித்துவிடும். இந்த முறையை அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்கும் வரை செய்யலாம்.
     

    மற்றொரு முறை வினிகரை பாட்டிலில் நிரப்பி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிது நேரம் வினிகர் வாசனை வரும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். அதே நேரம் அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, பாட்டில் புதிது போன்று காணப்படும்.
     

    அடுத்து செய்தித்தாளை பாட்டிலில் போட்டு நிரப்பி, இரவு முழுவதும் மூடி வைக்க வேண்டும். இதனால் அதிலிருந்து வெளிவரும் நாற்றம் அனைத்தும் போய்விடும்.

    0 comments:

    Post a Comment