Wednesday, 24 September 2014

Tagged Under:

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

By: ram On: 11:48
  • Share The Gag
  • கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.

    அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல...

    அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன?
    வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்...

    ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது. இதன் விளைவாக விருந்திற்காகச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்படியே தேங்கிவிட்டன.டாலிமேடிசன் மேற்பார்வையாயினும், விருந்துக்கான சமையற் பொறுப்பில் பணியாற்றியவர் ஸெட்டீ ஜான்ஸன் எனும் நீக்ரோ பெண்.

    தேங்கிவிட்ட உணவுப் பொருட்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஏங்கிவிட்ட ஸெட்டீ ஜான்ஸன், தயாரிக்கப்பட்டடிருந்த தின்பண்டங்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக ஒரு ஐஸ்பெட்டியில் வைத்த மூடிவிட்டாள்.
    அந்தப் பண்டம் நன்றாக மென்மையாகச் சலிக்கப்பட்ட மாவும் இனிப்பும் கலந்து, வர்ணமும் சுவைப் பொருட்களுமாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான கட்டிப் பொருள்.

    ஒரு சில நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகையில் விருந்து நடைபெற ஏற்பாடாயிற்று.

    விருந்து துவங்கும்போதுதான் சமையலறைப் பணிப்பெண் ஜான்ஸனுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தின்பண்டங்கள் நினைவுக்கு வந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் அது பனிக்கட்டிபோல் நன்றாக இறுகி விட்டிருந்தது. அவற்றை விருந்தினர்க்குப் பரிமாறத் தயங்கினாள். ஆயினும் அதன் சுவை நன்றாக இருக்கவே எடுத்து வழங்கி விட்டாள். விருந்துக்கு வந்தோர் அந்தப் பண்டத்தைப் பார்த்துத் தயங்கினார். ஒருவர் மட்டும் அதை வாயில் வைத்தவுடன் குளிர் தாங்காமல் கத்திவிட்டார். “விஷம் விஷம்’ என்று அலறினார்.

    கூட்டத்தில் குழப்பம் உண்டாகிவிட்டது. யாரும் எந்தப் பொருளையும் உட்கொள்ளவில்லை. பணிப்பெண் ஸெட்டீயைச் சிறையிலிட்டனர். ஜனாதிபதியின் மனைவிக்கு அதிர்ச்சி. உணவுப் பொருளில் விஷம் கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர், அதில் துளியூண்டு மட்டும் எடுத்துத் தின்று பார்த்தார். இதற்குள் பனிக்கட்டிபோல் இறுகியிருந்த அந்தத் தித்திப்பான சுவைமிக்க மாவுப் பொருள் சற்று குழைவாக ஆகி, வாயில் வைக்கின்ற அளவுக்குக் குளிர்விட்டுப் போயிருந்தது.

    “அட என்ன சுவை!’ என்று மகிழ்ந்து போனார். உடனே, தன் பணிப்பெண்ணைச் சிறையிலிருந்து விடுவித்தார். இதுவரை எவரும் தின்று சுவைத்திராததால் அந்த விருந்தினர்கள் பயந்து போயிருந்திருக்கின்றனர்.அதன் பின் ஓராண்டிற்குள் வேகமாகவே ஐஸ்கிரீம் உலகப்புகழ் பெற்றிவிட்டது.அத்தியாவசியப்பொருளாகக் கோடைகாலம் மட்டுமல்ல; குளிர்காலத்திற்கும் எந்த விருந்திலும் தவிர்க்க முடியாதப் பண்டமாகிவிட்டது.

    0 comments:

    Post a Comment