Wednesday, 24 September 2014

Tagged Under:

பூனையின் பல் நல்லதா, கெட்டதா?

By: ram On: 08:32
  • Share The Gag
  • சட்டசபையில், அரசின் சாதனைகளைப் பாராட்டி உறுப்பினர்கள்
    வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா
    பேசியபோது சொன்ன கதை:-
    -
    பூனையின் பல் நல்லதா, கெட்டதா?

    தமிழக அரசின் திட்டங்கள் எல்லாம் நல்லதா. கெட்டதா என்பது
    காண்பவரின் தன்மையைப் பொறுத்தது. ஒரு முறை ‘‘உலகம்
    நல்லதா? கெட்டதா?’’ என்ற கேள்வியை தன் குருவிடம்
    கேட்டான் ஒரு சிஷ்யன். உடனே, ‘‘பூனையின் பல் நல்லதா?
    கெட்டதா?’’ என்று திருப்பிக் கேட்டார் குரு.

    சிஷ்யன் குழம்பினார். கேள்விக்குப் பதில், கேள்வி தான் என்பது
    ஞானிகள் கையாளும் முறை.

    சிஷ்யன் சிந்திக்க ஆரம்பித்தான். பின்னர் குரு விளக்கினார்.
    பூனைக் குட்டியிடம் போய், தாய்ப் பூனையின் பல் நல்லதா?
    கெட்டதா? என்று கேட்டால், தாய் பூனையின் பல், கருணையின்
    இருப்பிடம் என்று சொல்லும்.

    எலியிடம் கேட்டால் என்ன சொல்லும்?

    ஏனென்றால், பூனைக் குட்டி தனது தாயை முற்றிலும்
    நம்பியிருக்கிறது. பல சமயங்களில், தாய் பூனை, தன் குட்டியை
    பல்லால் கவ்விக் கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில்
    வைக்கிறது. அதற்குத் தேவையான உணவினை அளிக்கிறது.
    எனவே, பூனைக்குட்டிக்குப் பூனையின் பல், கருணையின்
    இருப்பிடமாக விளங்குகிறது.

    அதே பூனையின் பல்லைப்பற்றி ஒரு எலியிடம் கேட்டால் அது
    என்ன சொல்லும் தெரியுமா? கடவுள், பூனைக்கு குத்தூசியைப்
    போன்ற பற்களைப் படைத்திருக்கிறாரே? என்ன கொடுமை?
    என்று கவலையோடு சொல்லும். அதுபோல, உலகம் நல்லதா,
    கெட்டதா என்பதும் உலகத்தைக் காண்பவரின் தன்மையைப்
    பொறுத்தது என்று கூறினார் குரு. சிஷ்யன் சிந்திக்கத்
    தொடங்கினான்.

    இது பகவான் ராமகிருஷ்ணர் சொல்லிய விளக்கம்.

    0 comments:

    Post a Comment