‘பொறாமை என்பது கோழைகளின் கோபம்’ என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் - தம்பிக்கி டையே... அக்கா - தங்கைக்கிடையே... நண்பர்களுக்கிடையே... மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே... இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற இருவருக்கிடையே அது இருக்காதா என்ன?
‘பொறாமை’ என்று சொன்னால் கொஞ்சம் கடுமையாகத் தெரியலாம். ‘பொசசிவ்னஸ்’ என்கிற போது, அதன் கடுமை மாறிப் போ கும். காதலிக்கிற போதும், கல்யாணத்துக்குப் பிறகும் ஆணும் பெண்ணும் பல வழிகளில் பொசசிவ்னஸை வெளிப்படுத்துகிறார்கள். அது பொறாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அதாவது, தன் துணையின் மீது அதீத ஆர்வம் காட்டுகிற துணைக்கு நிச்ச யம் அங்கே பொறாமை இருக்கும்.
நம்முடைய சமுதாயத்தில் பொறாமை கொள்ளக் காரணங்களுக்கா பஞ்சம்?
மனைவி தன்னைவிட நல்ல வேலையில் இருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, அழகாக இருந்தாலோ கணவருக்குத் தன்னையும் அறியாமல் பொறாமை தலைதூக்கும். அதன் வெளிப்பாடாக, மனைவி வேலைக்குப் போவதைத் தடுப்பார்கள். மனைவியுடன் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படி இல்லாமல், சில நேரங்களில் பொறாமை தெளிவாகத் தெரியாமல், வெறும் கோபமாகவும் வெளிப்படலாம். தம்பதிக்கிடையே காரணங்களே இல்லாமல் பிரச்னைகள் வெடிக்கும். பொறாமைப்படுவோருக்கு மட் டுமே அது புரியும்.
அதை எதிர்கொள்வோருக்குக் காரணம் தெரியாது. இருவருக்கும் இடையில் அன்பு குறைந்து, வெறுப்பு அதிகரித்து, ஒருகட்டத்தில் உறவே ஆட்டம் காணவும் அந்தப் பொறாமை காரணமாகும். அரிதாக சில சந்தர்ப் பங்களில் அந்தப் பொறாமையின் விளைவாக, ஆத்திரம் உச்சத்துக்குப் போய், அடி, உதை என வன்முறையில் இறங்கவும்,அதையும் தாண்டி கொலை, தற்கொலை என அத்துமீறவும் கூடும்.
பொறாமை என்பது பல நேரங்களில் உண்மையாக இல்லாமல், அப்படி நினைப்பவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம். நம்மு டைய துணை, நம்மைத் தவிர வேறு யாராலும் ஈர்க்கப்படக் கூடாது என்கிற ஆழ்மன பயம் பதிந்து போயிருக்கும். யதார்த்தமோ அப்படி இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஆண்-பெண் இருவரின் நட்புகளும் உறவுகளும் தொடரத்தான் செய்யும். அதன் விளை வாக, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் துணையின் மீது திணிக்கப்படும்.
அதாவது, துணையை அப்படிக் கட்டுப்படுத்தி, கைக்குள் வைத்திருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வு ஏற்படும். ஆணோ, பெண்ணோ - யாருக்கும் நட்பென ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயல்பு. திருமணத்துக்குப் பிறகும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அதைத் தவிர்த்து, ‘எனக்குப் பிடிக்கலை... நீ உன் நட்பை விட்டு விலகி னாதான் என் மனசு நிம்மதியாகும்’ எனக் கட்டுப்படுத்த நினைப்பது முழுக்க முழுக்க பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே.
பொறாமை யின் காரணமாக துணையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வதுதான் இதிலி ருந்து மீள முதல் வழி. பொறாமை என்கிற உணர்வு உண்டாக, நமது எண்ணமும் நம்பிக்கையும்தான் அடிப்படை. அதை மாற்றிக் கொண்டாலே பொறாமை காணாமல் போய் விடும். உதாரணத்துக்கு, ‘என் மனைவி வேலைக்குப் போறா... நிறைய சம்பாதிக்கிறா... அதனால அவளுக்குத் திமிரு’ என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களது மனைவிகளுக்கு உண்மையிலேயே அப்படி எந்தத் திமிரும் இருக்காது. கணவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்! சில பெண்களுக்கு தனது அழகிலும் ஆளுமையிலும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அது காலம் காலமாக சிந்தனையில் உறைந்து போனதன் விளைவாக, திருமணத்துக்குப் பிறகு, தனது கணவர், இன்னொரு பெண்ணிடம் லேசாக சிரித்துப் பேசினாலே, பொறாமை எட்டிப் பார்க்கும்.
‘நான் அவளை மாதிரி அழகில்லை. எனக்கு அவளைப் போல பர்சனாலிட்டி இல்லை...’ என வார்த்தைகளில் விஷம் கக்கி, பைசா பெறாத விஷயத்தைப் பெரிதாக்கி, பிரச்னையை உண்டு பண்ணுவார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சந்தேகமாக உருவெ டுத்து, ஒரு கட்டத்தில் பிரிவுக்குப் பாதை காட்டலாம். அதற்காக எல்லா பொறாமைகளையும் சந்தேகங்களையும் அர்த்தமற்றவை என ஒதுக்கவும் முடியாது.

0 comments:
Post a Comment