Thursday, 28 August 2014

Tagged Under: ,

உங்கள் காதலி உங்களை கழற்றி விடப் பார்க்கிறாரா – கண்டுபிடிக்க இதோ எளிய வழி !!

By: ram On: 17:26
  • Share The Gag

  • இவ்வுலகில் காதலிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அப்படி காதலிப்பவர்களின் அனைத்து காதலும் வெற்றி பெறுவதில்லை. காதலில் வெற்றி பெற்று கடைசி வரை வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்பவர்கள் வெகு சிலரே. காதலில் வெற்றி பெற்று சிலர் திருமண வாழ்க்கையில் தோற்பதுண்டு. ஆனால் பல பேர் காதலிலேயே தோற்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இனக்கவர்ச்சி. அதே போல் புரிதல், அலுப்புத் தட்டல் என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

    காதல் முறிவதற்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சரிசமமான பங்கை வகிக்கின்றனர். உங்கள் காதலியுடனான உறவில் ஏதேனும் உரசல் ஏற்படுகிறதா அல்லது உங்கள் காதலி உங்களை கலட்டி விட போகிறாரா என்று தெரியாமல், உங்கள் தலையை சொரிந்து கொண்டு இருக்கிறீர்களா..? அப்படியானால் அதனை சோதனை செய்ய வேண்டிய நேரம் இது. கீழ்க்கூறிய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்கத் தொடங்குங்கள்.

    உங்களுக்கு மத்தியில் நடக்கும் உரையாடலில் சுவாரஸ்யம் குறைகிறதா?

    இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, உங்கள் காதலி அன்யோநியமாக இல்லாமல் ஒரு இடைவெளியுடன் நடந்து கொள்கிறாரா? முன்பு போல் செல்ல சண்டை போடாமல், உங்களை கிண்டல் செய்யாமல் விலகியே இருக்கிறாரா? நீங்கள் கூறுவதில் குறை கண்டுபிடிப்பவராக இருந்தவர், இப்போது மௌன சாமியாராக மாறியுள்ளாரா? உங்கள் இருவரின் உரையாடலும் சம்பந்தமில்லாமல் எங்கோ செல்கிறதா? அல்லது தொலைபேசியில் நீங்கள் அழைக்க மறந்து விட்டாலும் கூட, உங்கள் மீது கோபம் கொள்வதில்லையா? பொதுவாக முக பாவனைகளும், கண்களுமே, உங்கள் காதலி உங்கள் மீது வைத்திருக்கும் நாட்டத்தை வெளிக்காட்டிவிடும். நீங்கள் உடன் இருக்கும் போது, அவளுக்கு எப்போதுமே சலிப்பு தட்டுகிறது என்றால், அவள் உங்களுக்கானவள் அல்ல.

    உங்களை விமர்சிக்க காரணமே தேவையில்லை

    உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த போதெல்லாம், உங்கள் முகத்தை பார்த்து விமர்சனம் செய்தவளாக இருந்திருக்கலாம் உங்கள் காதலி. ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்தாலும், அவள் வேதனை அடைகிறாளா? அல்லது நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாளா? சிறு வாக்குவாதம் உறவை வலுப்படுத்தினாலும், காரணமே இல்லாத வாக்குவாதங்கள் மற்றும் அதிகப்படியான விமர்சனங்கள், உங்கள் இருவருக்கும் உள்ள உறவை பாதிக்கும்.

    உங்களுக்கு வேண்டியவரை அவள் சந்திக்க விரும்புவதில்லை

    நீங்கள் விரும்பிய பெண்ணை காதலியாக அடைய, நீங்கள் பட்டபாட்டை உங்கள நண்பர்களும் அனுபவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை, அவள் திடீரென தவிர்த்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். உங்கள் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டத்தையும், அவளுக்கு திடீரென பிடிக்காமல் போனாலோ அல்லது நீங்கள் கெட்ட சகவாசத்துடன் இருக்கிறீர்கள் என்பதை போல் கூறினாலோ, உங்கள் உறவில் விரிசல் விழுகிறது என்று அர்த்தமாகும். அப்படிப்பட்ட அவளின் விமர்சனங்கள் உங்களை அவமானப்படுத்துவதாக இருந்தால், உங்கள் மீது அவள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்றும் சொல்லலாம். அதன் விளைவு பிரிவு மட்டுமே.

    உங்கள் காதலினால் உண்டான தீப்பொறி இப்போது இருப்பதில்லை

    காதல் என்பது உடல் கவர்ச்சி மட்டுமல்லாமல், மூளை வரை சென்று ஒருவித தீப்பொறியை ஏற்படுத்தி, உங்கள் உறவை நீடிக்க செய்யும். நீங்கள் செய்யும் குறும்புகள், நீங்கள் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மற்றும் நீங்கள் அவளை புகழ்ச்சியாக பேசியவைகள் ஆகிய செயல்கள் அனைத்தும் அவளை உருகச் செய்யும். ஆனால் திடீரென இந்த செயல்கள் எல்லாம் அவளை ஈர்க்கவில்லை என்றால், உங்கள் உறவுக்கு மத்தியில் பிளவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

    உடலளவில் உங்களின் நெருக்கத்தை அவள் விரும்புவதில்லை

    படுக்கை அறையில் இருக்கும் நெருக்கம் மட்டுமல்லாது, இறுக்கி அணைப்பது, முத்தங்கள் கொடுப்பது மற்றும் அரவணைப்பாக இருப்பது போன்றவைகளும் கூட அன்பின் வெளிப்பாடே. இவைகளில் நீங்கள் ஈடுபடும் போது, திடீரென அவள் ஒரு சந்நியாசி போல் ஒதுங்கினால், இந்த உறவு அவளுக்கு கசக்கிறது என்று அர்த்தமாகும். இதற்கு முன் உடல்ரீதியாக உங்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி, இப்போது குறைந்துவிட்டால் அது பிரச்சனைகளின் அறிகுறியாகும்.

    இருவரின் வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் இருப்பதில்லை

    இதற்கு முன்பெல்லாம் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறையை எப்படி இருவரும் சேர்ந்து களிக்க வேண்டும் என்பதை பற்றி முன்கூட்டியே பேச தொடங்கிவிடுவாள். அதே போல் உங்களை திருமணம் செய்வதை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசுவாள். இப்போது வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றால், உங்கள் உறவின் மீது அவளுக்கு இருக்கும் ஈடுபாடு போய்விட்டது என்று அர்த்தமாகும்.

    தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை

    உங்களுடன் ஒரு சிறிய விழாவிற்கு செல்ல வேண்டுமானாலும் கூட, அழகான ஆடைகள் அணிந்து அழகாக காட்சி அளிப்பாள். அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அதிக நேரத்தை செலவழித்து, ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு அதிக பணத்தை செலவழித்திருப்பாள். அதிலும் அது ஒரு படம் பார்க்க சென்றாலும் கூட இருக்கும். ஆனால் இப்போது திடீரென இதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், உங்களுடன் வெளியே வரும் போது, இப்போது தான் கோமாவில் இருந்து கண் விழித்த ஒரு நோயாளியை போல் வந்தால், உங்களுக்கே புரிந்துவிடும். இது ஒரு வகையில் உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்….!

    0 comments:

    Post a Comment