குழந்தை வளர்ந்து ஆளாகும் வரை அதை நோய்தாக்காமல் கண்ணும் கருத்துமாய் வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆனால் அக்கம் பக்கத்தார் கூறும் தேவையற்ற மூடநம்பிக்கையான செயல்களினால் அந்த குழந்தை பெரும்பாடு பட்டுவிடும். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள்.
தொப்புள் கொடி
கருவில் இருக்கும் குழந்தைக்கும் தொடர்பில் இருக்கும் தொப்புள் கொடியை கட் செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள். குழந்தையில் வயிற்றில் சிறிய அளவில் நீட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடியை கிளிப் மாட்டியிருப்பார்கள். இந்த பகுதியை தொற்றுநோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்குள் இந்த தொப்புள் கொடி காய்ந்து விழுந்து விடும். ஆனால் இன்றைக்கும் சில கிராமங்களில் தொப்புள் கொடிக்கு சுண்ணாம்பு, சாம்பல் போன்றவற்றை தடவினால் சீக்கிரம் தொப்புள் காய்ந்து விடும் என்று பூசுவார்கள். ஆனால் அது குழந்தையின் உயிருக்கே உலை வைத்துவிடும். தொப்புளில் சுண்ணாம்பு பூசுவதால் குழந்தை டெட்டனஸ் என்னும் ஜன்னி தாக்கி இறந்துவிடும்.
சீம்பால் தர மறுப்பு
குழந்தை பிறந்த உடனே தாய்க்கு சுரக்கும் சீம்பாலை சூனியக்காரியின் பால் என கொடுக்க மறுத்துவிடுவார்கள். இது தவறான செயலாகும். மஞ்சள் நிறத்தில் சுரக்கும் அந்த தாய்பாலில்தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
கண்ணில் எண்ணெய்
குழந்தையின் கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் எண்ணெய் விடுவார்கள். இது ஆபத்தானது. நேராக நுரையீரலை சென்று தாக்கி தொற்று நோயை ஏற்படுத்திவிடும்.
நீல நிற கண்கள்
பிறந்த குழந்தையின் கண்கள் நீல நிறத்தில் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பார்கள். இது தவறான கருத்து. குழந்தையின் கண்களின் நிறத்திற்கு காரணமான கார்னியா படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரிஜினல் நிறத்திற்கு மாறும். 6 மாதங்களில் கண்களில் ஒரிஜினல் நிறம் கிடைத்து விடும்.
சூரிய ஒளியில் காட்டுதல்
காலையில் சூரிய ஒளியில் குழந்தையை காட்டுவது அவசியம் என்று பிறந்த குழந்தையை வாட்டி எடுப்பார்கள். இது தவறான செயல். இதனால் குழந்தையின் மென்மையான தோல் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படும்.
0 comments:
Post a Comment