Wednesday, 20 August 2014

Tagged Under: ,

அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

By: ram On: 20:07
  • Share The Gag

  • தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றியும், உடல் அமைப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை.

    ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண்களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந்தையை பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

    கூந்தல் உதிர்வு

    கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உண்ணும் பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலான சத்துக்கள் பிரசவத்தின் போதிலேயே இழந்துவிடுவதால் சரியான போஷாக்கு கிடைப்பதில்லை. இதனால் பிரசவித்த பெண்களுக்கு கூந்தல் உதிர்கிறது. எனவே இரும்புச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகளை உண்பதன் இழந்த சத்துக்களை பெறமுடியும். கூந்தலுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். உதிர்ந்த கூந்தல் வளர்ச்சியடையும்.

    வறண்ட சருமம்

    கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில் செதிலாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மையடையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியில் கிளம்பும் போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட்டை போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

    கூந்தல் உதிர்வு

    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

    பித்த வெடிப்பு

    நீர்ச்சத்து குறைவினால் பெண்களுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப்பை போக்கும் கற்களைக் கொண்டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.

    0 comments:

    Post a Comment