எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ஜீன்ஸ் கடைகளும் என காட்சி அளித்தன. அங்குதான் பெண்களின் கூட்டமும் இருந்தது.தாவணி என்பது ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் ஒரு சிலரால் விரும்பி அனியப்படும் ஆடையாக மாறியது.
பள்ளிச் சீருடை வடிவத்திலாவது தாவணிகளுக்கு உயிர் கொடுத்து வந்த பல பள்ளிகளும் தாவணியின் கழுத்துக்களை சுடிதார் கயிற்றால் இறுக்கிக் கொன்றன. தற்போது தாவணி என்ற ஒரு ஆடையே வெகுவாக மறைந்து முற்றிலுமாக கிழிந்து விட்டது.. சரி தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப்பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும்.
பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன.
முழுக் கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அதுபோன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம். அல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன.
எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இதுபோன்ற டாப்ஸ்களை வாங்கும்போது அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது. கை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந்தெடுங்கள்.
ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம்.
உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும். ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம்.
0 comments:
Post a Comment