தற்போது வரும் தமிழ் சினிமாவில் எல்லாம், கதை இருக்கோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக சென்னை புகழ் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் 'நான் மதுரை காராண்டா...மலைக்கோட்டை காராண்டா' என்று ஹீரோக்கள் டயலாக் அடித்தது போக, சமீப காலமாக ‘அய்யே மூஞ்சிய பாரு பேமலின்னு’ சென்னை தமிழ் தான் நம்ம ஹீரோக்களின் ஆயுதம். அந்த வகையில் சென்னையை மைய்யமாக வைத்து எடுத்த படங்களின் சின்ன தொகுப்பு தான் இந்த பகுதி
புதுப்பேட்டை
சென்னை தமிழ் என்றாலே முதலில் நம் நியாபகத்திற்கு வருவது தனுஷ் தான். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை தான், சென்னையின் இருட்டு வாழ்க்கையை தெளிவாக மக்களுக்கு படம் பிடித்து காட்டியது. சென்னை புகழ் லிஸ்டில் ஆல் டைம் பேவரட் என்றால் புதுப்பேட்டை தான்.
சென்னை-28
சென்னை என்றாலே வெட்டு, குத்து தான். அதிலும் வட சென்னை என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் முதன் முதலாக வடசென்னையில் வசிக்கும் ஜாலியான் ப்ரண்ட்ஸ், கிரிக்கேட் என அட்டாகசம் செய்திருப்பார் வெங்கட் பிரபு.
ஆரண்யகாண்டம்
வழக்கமான வடசென்னையில் அடு, தடி, வெட்டு குத்து தான். ஆனால் இரண்டும் பெரிய டான்களின் ஈகோ மோதலை மிகவும் துல்லியமாக படம் பிடித்திருப்பார் தியாகராஜா குமாராவேல். இப்படத்தின் மிகப்பெரிய பலமே இசை தான். ஒரு சாதரண பெண் மொத்த கேங்ஸ்டர் கும்பலையும் ஏமாற்றி செல்வது போல் கிளைமேக்ஸ் அமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர்.
பொல்லாதவன்
புதுப்பேட்டையை தொடர்ந்து சென்னை பையனாக தனுஷ் நடித்த படம் பொல்லாதவன். இப்படத்தில் சென்னையில் நடக்கும் சிறு சிறு பைக் திருட்டை நம் கண்முன் கொண்டு வந்திருப்பார் வெற்றிமாறன். காதல், காமெடி என்று ஜாலியாக செல்லும் 1ஸ்ட் ஆப், மிரட்டல், சண்டை என 2ஆப். திரைக்கதையில் சுவாரசியம் ஏற்றியிருப்பார் இயக்குனர்.
ஈ
வடசென்னை வாலிபன் ஒருவன் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வான், ஆனால் ஒரு கட்டத்தில் நாட்டின் பெரிய பிரச்சனை ஒன்று அவன் தலையில் விழ, அதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை மிக அழகாக, தைரியமாக எடுத்திருப்பார் ஜெனநாதன். இப்படத்தில் ஈ என்ற கதாபாத்திரத்தில் ஜீவா வாழ்ந்திருப்பார்.
வணக்கம் சென்னை
சென்னை என்றாலே அழுக்கு, குடிசை என்று காட்டி வந்தவர்கள் மத்தியில் மிகவும் கலர் புல்லாக காட்டியவர் கிருத்திகா உதயநிதி. சாப்ட்ஃவேர் வேலை, கெட் டு கெதர் லைப் என சென்னையில் ட்ரண்டியான மறுபக்கத்தை ஒரு பெண் இயக்குனராக இவர் எடுத்திருந்ததற்காகவே பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக அனிருத்தின் சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடல் சென்னையின் ஆந்தமாகவே மாறியது.
திருமலை
சென்னை இளைஞனை செம்ம மாஸாக காட்டிய படம் தான் திருமலை. இதற்கு முழுக்காரணமும் இளைய தளபதி விஜய்யை தான் சாரும். இப்படத்தில் சென்னை பாஷை பேசி கலக்கியிருப்பார். இப்படத்திற்கு பிறகு தான் விஜய்யின் திரைப்பயணத்தின் கிராப் உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.
மெட்ராஸ்
பெயரிலேயே மெட்ராஸை வைத்து ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தற்போது திரையரங்குகளை கலக்கி கொண்டிருக்கும் படம் தான் மெட்ராஸ். கானா பாட்டு, கலை நிகழ்ச்சி, புட் பால், நடனகுழுவினர் என வட சென்னையை ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்த பீலிங் இந்த படத்தை பார்க்கும் போது. ‘எங்க ஊரு மெட்ராஸ்’ இந்த பாடல் தான் தற்போது சென்னையில் பல இளைஞர்களின் ரிங் டோன்.

0 comments:
Post a Comment