Wednesday, 8 October 2014

Tagged Under:

“ஓ” குரூப் இரத்தம் பெண்களுக்கு ஆபத்தானதா !

By: ram On: 20:05
  • Share The Gag
  •     

    “ஓ” குரூப் இரத்தம் பெண்களுக்கு ஆபத்தானதா !ஒரு பெண்ணுக்கு குழந்தை பேறு ஏற்படுவது அவரது ரத்த குரூப்பை பொறுத்தது. குழந்தை பேற்றை ஊக்குவிப்பதும், குழந்தை பாக்கியத்தை குறைப்பதும் ரத்த குரூப்பை சார்ந்தே உள்ளது.

    குறிப்பாக “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு. ஏனெனில் இவர்களின் கருப்பையில் குறைந்த அளவே கரு முட்டை உற்பத்தியாகிறது. அவ்வாறு உருவாகும் கரு முட்டையும் கரு உண்டாகும் தன்மை குறைந்ததாக உள்ளது.

    இந்த தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்து கல்லூரியும் இணைந்து 560 பெண்களிடம் ஆய்வு நடத்தினர்.

    அந்த ஆய்வுக்கு சராசரியாக 35 வயது வரை உள்ள பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    ரத்தத்தில் உள்ள முதிர்ந்த கரு முட்டை சுரப்பிகளின் ஹார்மோனின் அளவு பார்க்கப்பட்டது. ஏனெனில் கருத்தரிப் பதில் இவற்றின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

    சோதனைக்கு எடுக்கப் பட்ட ரத்த வகைகளில் “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு முதிர்ந்த கரு முட்டை சுரப்பிகளில் ஹார்மோன் உற்பத்தியாகும் அளவு 10 மடங்கு அதிகமாக இருந்தது. இது கரு முட்டையின் கருத்தரிப்பு சக்தியை குறைய செய்கிறது.இதன் மூலம் “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு மற்ற ரத்த குரூப் பெண்களை விட குழந்தை பாக்கியம் குறைவு என தெரிய வந்துள்ளது .முறையான சிகிச்ச்சைகள் எடுக்கும் பட்சத்தில் குழதைகள் பெற்றுகொள்ளலாம் “ஓ” குரூப் ரத்த பெண்கள்.

    0 comments:

    Post a Comment