1.சோற்றுக் கற்றாழை:
இதற்கு மற்றொரு பெயர் குமரிக் கற்பகம் என்பதாகும். இந்தச் சோற்றுக் கற்றாழையின் மடலை உரித்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் திரிகடுகம் சேர்த்து தினமும் காலையில் ஒரு துண்டு விழுங்கி வந்தால் கண் பார்வை கூர்மை பெறும்.
நரை, திரை நீங்கி இளமையான தோற்றம் உண்டாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கலவையாகும்.
2. மன வேதனை மாறி தெளிவு பெற:
தினமும் காலையில் குளித்து முடித்த பின்னர் சிறிதளவு எள்ளை எடுத்து சாப்பிட்டு வந்தால் மன வேதனை, உடல் வேதனை நீங்கும்.
எள்ளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற சத்துப் பொருட்கள் இருக்கின்றன.
துருக்கி நாட்டு போர் வீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன் எள்ளினை ஒரு பையில் போட்டு தங்களுடன் எடுத்துச் செல்வார்களாம். ஒரு வேளை தாங்கள் போரில் தோற்றுப் போய் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டால் சிறையில் இந்த எள்ளினை சாப்பிடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் மற்ற கைதிகளை விட வெகு நாட்கள் மன வேதனை, உடல் வேதனை இன்றி உயிருடன் இருந்திருக்கிறார்கள்.
எள்ளின் பூவினை எடுத்துப் பல்லில் படாமல் விழுங்கினால் ஒரு பூவிற்கு ஒரு வருடம் வீதம் கண் நோய் வராது.
தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பிற்கு எள் மிகவும் சிறந்த ஊட்டச் சத்தாகும்.
3.அருகம்புல்:
அருகம்புல்லை எடுத்து வந்து சாறு எடுத்து அதனுடன் 5 மிளகைத் தூள் செய்து அதனுடன் கலந்து இதைக் காலையில் வெறும் வயிற்றில் 100 மி.லி அளவு குடித்து வந்தால் எந்த நோயும் அணுகாது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.
சனிக்கிழமை முதல் ஆரம்பித்து இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை (ஒன்பது நாட்கள்) வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறாகக் குடித்து வந்தால் ஒரு வருடத்திற்கு விண் கதிர்களால் நமக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது. இந்த ஒன்பது நாட்களும் அசைவ உணவு, மது, மாமிசம், புகையிலை, பாக்கு, சிகரெட், போதைப் பொருட்களும், தாம்பத்யமும் கூடாது. மூலிகைச் சாறு குடித்த ஒன்றரை மணி நேரத்திற்கு வேறு உணவு சாப்பிடக் கூடாது.
4. வேம்பு:
நூறு ஆண்டுகள் ஆன வேப்ப மரத்தின் பட்டை, காய், இலை, பூ இவைகளைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்துச் சலித்து பதனம் செய்யவும். இதுவே ‘பராசக்தி காயகல்பம்’ எனப்படும்.
இந்தப் பொடியை ஒரு குடுவையில் வைத்து, அதனுள் ஒரு வாழைப் பழத்தை வைத்து நாற்பது நாட்கள் கழித்து எடுத்தால் அது காயாக மாறி விடும். அதனை சாப்பிட்டால் தேகம் பலம் பெறுவதோடு நீண்ட ஆயுளும் பெறலாம்

0 comments:
Post a Comment