கத்தி: தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடும் விதத்தில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வரும் 2வது படம் தான் கத்தி. இப்படம் இன்று காலை வரை வெளிவருமா என்று ரசிகர்களிடையே பெரிய குழுப்பம் நீடித்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை, கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
ட்ரைலர் பார்க்கையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள சிறு கிராமங்களை அவர்கள் லாபத்திற்கு பயன்படுத்துவது போன்றும், அதை இளைய தளபதி எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பது போல் தெரிகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனெவே பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இளைஞர்கள் கனவி கன்னியாக விளங்கும் சமந்தாவும் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
பூஜை: ஹரி-விஷால் கூட்டணி தாமிரபரணி படத்தின் வெற்றிக்கு பிறகு இணைந்திருக்கும் படம் தான் பூஜை. படத்தின் பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பி, சி செண்டர்களை கவர்ந்துவிட்டது. படமும் கண்டிப்பாக அவர்களுக்கான படம் தான்.
ஹரியின் ஸ்பீட் பார்முலா திரைக்கதை கண்டிப்பாக இதிலும் ஒர்க் அவுட் ஆகியிருக்கும் என்று நம்பலாம். இதற்கெல்லாம் மேலாக ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிக்கு இப்படத்தில் பஞ்சம் இருக்காது என்பதால் படத்திற்கு கூடுதல் ப்ளஸ் பாயிண்ட் கிடைத்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
இந்த இரண்டு படங்களில் எது ரசிகர்களை கவரும், பாக்ஸ் ஆபிஸில் கல்லாவை நிரப்பும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:
Post a Comment