
இன்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கானா பாலா, மனோபாலா, மயில்சாமி மற்றும் இயக்குனர் பாலா கலந்து கொண்டாலும் சிறப்பு அம்சமாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி, எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை அழைத்து கவுரவித்தார் அர்ஜூன். முகுந்த்தின் மனைவி இந்து, மகள் ஆர்சியா, முகுந்த் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பாலா பேசும்போது, இந்தப்படத்தின் விழாவுக்கு அர்ஜூன் சார் என்னை அழைத்தபோது, விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தார் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னார்.
இதனையடுத்து நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடன் வர சம்மதம் சொன்னேன். இதுவரை நான் எந்த ஒரு நடிகர், நடிகையருடனோ அல்லது வேறு சினிமாக்காரர்கள் உடனே போட்டோ எடுக்க ஆசைப்பட்டதில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி போட்டோ எடுத்து கொண்டார்.
இதைப்பார்த்த கோடம்பாக்கத்தினர் எந்த ஒரு நடிகர் கூடவும் புகைப்படம் எடுக்காத இந்த மனிதர் இவர்கள் கூட நின்று எடுத்திருப்பது அவரின் தேசபற்றை காட்டுகிறது என்றனர்.
0 comments:
Post a Comment