Tuesday, 9 September 2014

Tagged Under: ,

சார்… நீங்கதான் உதவணும்! தாணுவிடம் சரண்டர் ஆன அதர்வா

By: ram On: 07:27
  • Share The Gag
  • கணிதன், ஈட்டி, அதற்கப்புறம் களவாணி சற்குணம் இயக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தனக்காக ஆவி பறக்க தயாராகிக் கொண்டிருந்தாலும், ஆறிப்போன உப்புமாவை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம் அதர்வா. சமீபத்தில் வெளிவந்த இரும்புக்குதிரை அதர்வாவின் மார்க்கெட்டில் அதள பாதாளத்தை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்துவிட்டது. இந்த பேரதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம். இத்தனைக்கும் இந்த படம் பிரேக் ஈவன் ஆகிருச்சு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து நாதஸ்வரம் ஊதினாலும், அதை சங்கு சப்தமாகவே கருதுகிறது கோடம்பாக்கம். ஏனென்றால் அதர்வா கேட்கும் சம்பளம் அப்படி.

    பின்வரும் படங்கள் தன்னை காப்பாற்றுமா, மாட்டாதா? என்கிற கவலையெல்லாம் அதர்வாவை வாட்டி எடுக்க, அண்மையில் வலிய சென்று பிரபல தயாரிப்பாளர் தாணுவை சந்தித்திருக்கிறார் அவர். ‘சார்… ஒரு ஹீரோவை முறையா பிரமோட் பண்ணி, அவருக்கு ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுப்பது ஒரு கலை. அதை சரியாக செய்வது நீங்கதான். எனக்கும் கை கொடுத்து உதவணும்’ என்று கேட்டுக் கொண்டாராம்.

    ‘உங்க அப்பா முரளி மேல எனக்கு தனி பாசம் உண்டு. அவருக்காக செய்யுறேன். பதறாமல் போப்பா.. ’ என்று ஆறுதல் கூறி அனுப்பியிருக்கிறார் தாணுவும்.

    முல்லைக்கு தேர் கொடுப்பீங்களோ, மூஞ்சுருக்கு கொழுக்கட்டை கொடுப்பீங்களோ? முதல்ல அதர்வாவுக்கு ஒரு ஹிட்டு கொடுங்கப்பா…!

    0 comments:

    Post a Comment