நீங்க பழைய சாதம் சாப்பிட்டிருக்கிங்களா?
முந்தைய நாள் வடித்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு பாருங்கள்! தேவாமிர்தமாக இருக்கும்.
சாதாரண சோற்றை விட சக்தி மிகுந்தது பழைய சாதம்.
நம் முன்னோர்கள் இந்த பழைய சோற்றை சாப்பிட்டுத்தான் வலிமையானவர்களாக இருந்தார்கள்.
‘இந்தப் பழய சாதத்தில் பி6, பி12 போன்ற ஏராளமான வைட்டமின்கள் இருக்கிறது’ என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள்.
பழைய சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
பன்றிக் காச்சல் மட்டுமல்ல, எந்தக் காச்சலும் அணுகாது!,
உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணமாகும். சிறு குடலுக்கு நல்லது. அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாகும். இளமையாக இருப்பார்கள்
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால், சிறு குடலுக்கு நன்மை செயும் கோடிக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பழைய சாதத்தோடு இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செகிறது.
பழைய சாதம் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய உதவியாக இருக்கிறது.
அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாதவர்கள் இதை சாப்பிட வேண்டாம். ஏனென்றால், பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும்.
0 comments:
Post a Comment