தற்போதைய தமிழ் சினிமாவில் தன் வித்தியாசமான இசையில் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சந்தோஷ் நாரயணன். இவர் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மெட்ராஸ்.
இப்படத்தின் பின்னணி இசையில் வரும் சிலவற்றை சந்தோஷ் நாராயணன், ஹன்ஸ் சிம்மர் இசையமைத்த இன்செப்ஷன் படத்தில் இருந்து காப்பியடித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு விளக்கம் அளித்த இவர் "ஹன்ஸ் சிம்மர் இசையமைத்த இன்செப்ஷன் படத்தின் 'டைம்' இசையைப் போலவே 'மெட்ராஸ்' படத்தில் சில இசைக் கோர்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அவ்வாறு கூறிய இசை வல்லுநர்களுக்காக விரைவில் 'மெட்ராஸ்' படத்திற்காக நான் உருவாக்கிய இசையை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய இருக்கிறேன்" என்று தன் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 'மெட்ராஸ்' படத்தில் இடம்பெற்ற KILLED FROM INSIDE என்ற பெயரில் பின்னணி இசையினை வெளியிட்டு, "'மெட்ராஸ்' படத்தின் பின்னணி இசையினை சொன்னது போலவே வெளியிட்டு விட்டேன். தற்போது படத்தின் பின்னணி இசை உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்வது புத்துணர்ச்சியாக இருக்கிறது.
இசையை காப்பியடித்திருக்கிறேன் என்ற செய்திக்கு விளக்கம் அளிக்கவே இதனை பதிவேற்றி இருக்கிறேன். எனது பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்க காத்திருக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment