23 வயதை கடந்து தனது சொந்த காலில் நிற்கும் எந்த ஒரு பெண்ணிற்கும் தனது வாழ்கை குறித்த தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான தகுதியுண்டு. காதலுக்கு அர்த்தம் தெரியாமல் வெறும் நிறத்தை மட்டுமே பார்த்து மனதை பறிகொடுத்து திருமணத்திற்கு பின் கணவனின் சுயரூபம் தெரிந்து கண்ணீர் வடிக்கும் இளம் பெண்களையும் பார்க்க முடிகிறது.
:-
கடைசியில் கோர்ட் படியேறி கணவன் மனைவி உறவு பந்தத்தைஅறுத்துக்கொள்வது அல்லது உயிரை விடும் முடிவை மேற்கொள்ளும் பெண்கள் பலர் இருக்கவே செய்கின்றனர். திருமணத்திற்கு முன் கொஞ்சம் கவனமாக இருந்தால் திருமணம் போல் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையும் இனிக்கும். .
:-
பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்யும் பொழுது அதில் முக்கியமாக பெற வேண்டிய ஒன்று பெண்ணின் முழு சம்மதம். பெண்களுக்குதிருமணம் நிச்சயிக்கும் பொழுது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். பெண்களை காட்டிலும் 3 வயது அதிகமாகஉள்ள ஆண்களை துணையாக தேர்ந்தெடுக்கலாம்.
:-
7 வயது 10 வயது வித்தியாசத்தில் மணமகனை தேர்ந்தெடுத்தால் அதில் பல்வேறு சிக்கல்களை வருங்காலத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஜாதகம் பார்ப்பதற்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவிற்கு மருத்துவ சான்றிதழ்களை இரு தரப்பிலும் வாங்கி பரிசோதித்துக்கொள்வது அவசியம்.
:-
அதே போன்று தனது படிப்பிலும், சம்பளம், வேலை ஆகியவற்றுக்கு சமமான ஆண் மகனைத்தான் தேர்வு செய்யவேண்டும். இதனால், ஏற்படும் மன வருத்தங்கள் பெரிய அளவிலான பிரிவுகளை உண்டாக்கி நிரந்தரமாக உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். திருமணத்தின் போது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னாலும் சூழல்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றிவிடுகிறது.
:-
நிறம், உடல்வாகுக்கு ஏற்றவாறு மணமகனை தேர்வு செய்யவேண்டும். திருமணத்திற்கு முன் தன் அழகை கௌரவமாக மதிக்கும் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு அதை அபாயகரமானதாக பார்க்கின்றனர். இதனால், தான் பெரும்பாலான குடும்பங்களில் சந்தேகம் எழுந்து கொலை என்ற அளவிற்கு போய்விடுகிறது.
:-
நிச்சயதார்த்ததை உறுதி செய்வதற்கு முன்பே அதிக காலம் எடுத்து மாப்பிள்ளை பற்றியும், மாப்பிள்ளை வேலை செய்யும் இடம், அவரின் பழக்கவழக்கம், குடும்ப பின்னணி அனைத்தையும் சரிவர விசாரிப்பது அவசியம். இதில் பல்வேறு விதங்களில் தற்போது மோசடி செய்யப்பட்டு அதனால் ஆலோசனைக்கு வருபவர்கள் அதிகரித்துள்ளனர்.
:-
பெண்கள் கட்டாயம் தங்கள் உடைகளில் கட்டுப்பாடு வைத்துக்கொள்ளவேண்டும். உடலுடன் இணைந்த இறுக்கமான உடைகள். இதுபோன்ற உடைகள் பெண்கள் அவர்களுக்கு அவர்களே தேடிக்கொள்ளும் வினைகள் என்று தான் கூறவேண்டும். நவீன நாகரீக ஆடைகளை அணிவதற்கு யாரும் தடைசொல்வது கிடையாது.
:-
ஆனால், அதில் கட்டுபாடு என்பது அவசியம்.தன் பிள்ளைஎன்று கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து வளர்ப்பதால் திருமணம் முடிந்து செல்லும் இடத்திலும் அதனையே எதிர்பார்க்கின்றனர். பிடிவாத குணத்துடன் வளர்க்கப்படும் பெண்கள் கட்டாயம் திருமண வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
:-
இதுபோன்ற வேறுபாடுகளில் திருமணம் செய்தவர்களில் ஒருவர் , இருவரை தவிர 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பிரிவை சந்திக்கின்றனர். விவகாரத்துக்கு பிறகு ஆண்களால் சமூகத்தை எளிதாக எதிர்கொள்ளமுடியும். ஆனால்பெண்கள் தங்கள் வாழ்கையை இழந்து தவிக்கும் சூழல் உருவாக்கிவிடும். திருமணத்திற்கு முன்பு அதிக கவனத்துடன் தன் துணையை தேர்ந்தெடுக்கவேண்டும்.
0 comments:
Post a Comment