இப்போதெல்லாம் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படங்களையே ரசிகர்கள் நீளமாக இருப்பதாக முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படங்களே ரசிகர்களின் தேர்வாக இருக்கிறது. அண்மையில் வெற்றி பெற்ற பல படங்கள் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாக ஓடக்கூடிய படங்களே. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஜிகர்தண்டா படம் மிக நீளமான படமாக உள்ளது! இந்தப்படம் மொத்தம் 2 மணி 54 நிமிடங்கள் ஓடுகிறது! அதாவது இடைவேளை வரை 1 மணி 23 நிமிடமும், இடைவேளைக்குப் பிறகு 1 மணி 31 நிமிடங்களும் ஓடக்கூடிய அளவுக்கு ஏறக்குறைய மூன்று மணி நேரத்தை நெருங்குமளவுக்கு நீளமான படமாக உள்ளது!
இந்த வருடம் வெளியான படங்களிலேயே இதுவரை மிக நீளமான படம் என்று விஜய் நடித்த, 'ஜில்லா' படம்தான் சொல்லப்பட்டது! ஜில்லா படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடியது. ஜிகர்தண்டா படமோ ஜில்லாவின் நீளத்தை முறியடித்துவிட்டது! ஜிகர்தண்டா படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ள நிலையில் அப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்க ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜிகர்தண்டா படத்தை பார்க்கும் அன்பு ரசிகர்களே, தயவு செய்து படத்தில் இடம்பெறும் திருப்பங்களையும், கதையையும் வெளிப்படுத்தாதீர்கள்! எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கூறிப்பிட்டிருக்கிறார்.
இவர் இப்படி என்றால் சமீபகாலமாக சண்டைக்கோழி என பெயர் எடுத்து வரும் ஜிகர்தண்டா படத்தின் ஹீரோவான சித்தார்த்தும் தன் பங்குக்கு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஜிகர்தண்டா பைரசி சம்பந்தமான ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே எங்க டீமுக்கு தகவல் தெரிவியுங்கள், படத்தை தியேட்டரிலேயே பார்த்து ரசியுங்கள் என்பதே சித்தார்த்தின் வேண்டுகோள். ஜிகர்தண்டா சித்தார்த்தின் 21-ஆவது படம் என்பது கூடுதல் தகவல்!
0 comments:
Post a Comment