
இப்படத்தை தொடர்ந்து உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கினார். இதையடுத்து தற்போது நடித்துவரும் ‘நண்பேன்டா’ படத்திலும் நயன்தாராவையே ஜோடியாக்கியுள்ளார்.
இந்நிலையில், உதயநிதி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் மீண்டும் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதியும்-ஹன்சிகாவும் மீண்டும் ஜோடி சேரவுள்ளனர். காதல், காமெடி கலந்து உருவாகும் இப்படத்தை உதயநிதியே தயாரிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment