சமீப காலமாக தமிழில் அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. எனவே தயாரான படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் அஞ்சான் உட்பட 37 படங்கள் ரிலீசாக காத்திருப்பதாக கூறுகிறது தமிழ் பட உலகம். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இப்போதுதான் இவ்வளவு அதிக படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது.
வி.ஐ.பி,, சதுரங்க வேட்டை இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக, ஆகஸ்ட் மாதத்தில் 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
அஞ்சான், காவியத்தலைவன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வானவராயன் வல்லவராயன், கவுண்டமனி நடித்துள்ள 49 ஓ, கன்னக்கோல், சண்டியர், சரபம், ஜிகிர்தண்டா, பட்டைய கிளப்பணும் பாண்டியா, சிநேகாவின் காதலர்கள், ஆள், பூலோகம், பரணி, ஆ, தகடு தகடு, மொசக்குட்டி, சேர்ந்து போலாமா, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, வாலிப ராஜா, அரண்மனை, வாலு, மெட்ராஸ், கங்காரு, புலிப்பார்வை, இரும்புக்குதிரை, சலீம், காதலைத்தவிர வேறொன்றுமில்லை, வெண்நிலா வீடு, சோன்பப்டி, திருடன் போலீஸ், தொட்டால் தொடரும், பூலோகம், கடவுள் பாதி மிருகம் பாதி, காமராஜர் மற்றும் ஆங்கிலப் படங்களான ஹெர்குலீஸ் ரிட்டர்ன், தி எக்ஸ்பெண்டபிள் 3 ஆகிய 37 படங்கள் ஆகஸ்ட் மாத ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இன்னும் சில டப்பிங் படங்களும் இந்த லிஸ்டில் சேரும் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment