சூர்யா-ஹரி கூட்டணியில் ஹிட் அடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகியவற்றை தொடர்ந்து சிங்கம்-3 ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் ஹரி சிங்கம் &3க்கு நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். அதில் போலீஸ் யூனிபார்ம் அணியாத சீக்ரெட் போலீஸ் ஆபீசரைக் கொண்ட கதைக்கு சூர்யா ஓகே சொல்லியிருக்கிறார்.
அந்தக் கதைக்கு திரைக்கதை அமைக்கவும், சீன் பிடிக்கவும் சில உதவி இயக்குனர்களை நியமித்திருக்கிறார் ஹரி. அவர்கள் ஹரியின் அலுவலகத்தில் அமர்ந்து தீவிரமான டிஷ்கசனில் இருக்கிறார்கள்.
தற்போது விஷால் நடிக்கும் பூஜை படத்தில் இருக்கும் ஹரி. விரைவில் சிங்கம்-3யின் கதையை இறுதி செய்து சூர்யாவிடம் காட்டுவார் என்றும் அவர் ஓகே சொல்லிவிட்டால் பூஜைக்கு அடுத்த படம் சிங்கம்-3தான் என்கிறார்கள். இதற்கிடையில் சிங்கம்-3யை தயாரிக்க பல்வேறு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தி ரீமேக் உரிமைக்கும் இப்போதே சொல்லி வைத்து விட்டார்கள்
0 comments:
Post a Comment