Monday, 16 December 2013

Tagged Under: , , , ,

குளிர் கால எச்சரிக்கைகள்!

By: ram On: 18:32
  • Share The Gag



  • கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.அது மட்டுமின்றி மழைக் காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக் கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால் மழைக்காலத்தில் வெந்நீர் பருகுவது நல்லது. எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதுடன் உடல் பளபளப்பும் ஏற்படும்.


    மழை மற்றும் குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம்.


    இதற்கிடையில் இதே குளிர் காலத்தில்தான் மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை மருத்துவமனை ரிகார்டுகள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில்தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்த ஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது.


    மாற்றங்களுக்கான காரணங்கள்:


    குளிர், ரத்தக்குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதே சங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்,தட்டை அணுக்கள், பைபர் நோஜன் அதிகரிக்கிறது .கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால்,அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது.


    இதனால்தான் நடுவயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. அதிலும் ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை இது போன்ற காலங்களில் மிகவும் கஷ்டம். எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க தலைக்கு குல்லா, கை, கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்.


    முக்கியமாக மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும் போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும்.
    பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்திவிட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும்.


    சமவெளிகளில்கூட மார்கழி, தை மாதங்களில், இதயநோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபட ப் பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப்பையில், ‘சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.


    அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், ‘ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சி யசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், ஏசியை அணைத்து வைக்க வேண்டும்.

    0 comments:

    Post a Comment