Friday, 13 December 2013

Tagged Under: , ,

உலக கோப்பை கபடி : இந்தியா பெண்கள் அணி கோப்பையை வென்றது!

By: ram On: 21:31
  • Share The Gag



  • உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.


    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.


    இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ கார் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்திற்கான போட்டியில் டென்மார்க் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித் தது குறிப்பிடத்தக்கது .

    0 comments:

    Post a Comment