Tuesday, 10 December 2013

Tagged Under: , , , ,

வெற்றி பெற்றவர்களின் தனித் தன்மைகள்!

By: ram On: 16:47
  • Share The Gag
  •    
    வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்


    இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.


    அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.


    இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச் சாதனையாளர்களிடம் உள்ள சிறப்பான குணங்களை துல்லியமாக முறைப்படுத்திக் காட்டியுள்ளது. அவை :


    1.) நடைமுறை அறிவு


    சாதனையாளர்களில் 79 விழுக்காடு இந்த நடைமுறை அறிவு உள்ளவர்களாக இருந்தார்கள். நடைமுறை அறிவு தேவை என்பதையும் அறிந்து இருந்தார்கள். அதில் 61 விழுக்காட்டினார் நடைமுறை அறிவுதான் தங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதைனையும் அறிந்து இருந்தார்கள்.


    2.) தான் மேற்கொண்ட துறையில் சிறப்பான அறிவினைப் பெறுதல்:


    நடைமுறை அறிவுக்கு அடுத்த இடத்தை பெறுவது ஒருவர் தான் எடுத்துக் கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவினைப் பெறுவதாகும். சாதனையாளர்களில் 75 விழுக்காட்டினர் இதனை முக்கியப் பண்பாகக் கருதுகின்றனர்.


    3.) தன்னம்பிக்கை :



    மிகச் சிறந்த சாதனையாளர்கள் தங்களிடமுள்ள வளங்களிலும் திறமைகளிலும் நம்பிக்கை வைத்தே செயல்படுகிறார்கள். 77 விழுக்காட்டினர் தன்னம்பிக்கைதான் தங்கள் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.


    4.) புத்திசாலித்தனம் :


    வெற்றி பெறுவதற்கு புத்திசாலித்தனம் முக்கியம் என 43 விழுக்காட்டினர் கூறினர். 52 விழுக்காட்டினர் புத்திசாலித்தனம் தான் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டனர்.


    5.) எடுத்த செயலை முடிக்கும் திறன் :


    நான்கில் மூன்று பங்கினர் தாங்கள் சாதனை புரிந்ததற்கு எடுத்த செயலை முடிக்கும் தங்களின் தனித் திறனே காரணம் என்று குறிப்பிட்டனர்.


    வாரத்திற்கு 100 மணி நேரம் என்ற வகையில் உண்மையாகவும் கடினமாகவும் தொடர்ந்தும் விடாப்பிடடியாகவும் உழைத்த உழைப்பே சாதனை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்கிறார் ஒரு பேராசியர்.


    நடைமுறை அறிவு, தொழில் துறை அறிவு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், செயல்திறன் ஆகிய மேலே குறிப்பிட்ட ஐந்து பண்புகள் மட்டுமின்றி, தலைமைத் தன்மை, ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன், மற்ற மனிதர்களோடு நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கமான உறவு, சில வேளைகளில் சிறிது அதிஷ்டமும் தேவையானவையாகும்.


    இருப்பினும் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து பண்புகளுக்கு சாதனை நிகழ்த்துவதில் முதன்மை பெறுகின்றன. இந்தப் பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால் சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.

    0 comments:

    Post a Comment