Tuesday, 10 December 2013

Tagged Under: , , , ,

உயர்ந்த பெண்ணின் உன்னதமான கடமைகள்!

By: ram On: 23:21
  • Share The Gag

  • உயர்ந்த பெண்ணின் உன்னதமான  கடமைகள்

    பெண்கள் சிருஷ்டியில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே சக்தியின் வடிவங்கள். உலக இயக்கம் பெண்களாலேயே நடைபெற்று நிலை பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம் பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளாய் இன்னும் பல வகைகளில் உறவு உடையவளாகி நலம் செய்கிறாள்.


    சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாகச் செய்கிறாள். குடும்பம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குடும்பத் தலைவியின் கையில்தான் இருக்கிறது. கணவனையும், கணவன் வீட்டாரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை அமைத்துக் கொள்ளும் பெண் வாழ்க்கையில் வெற்றி அடைகிறாள். கணவனை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோ அல்லது வேதனையில் ஆழ்த்துவதோ மனைவியின் கையில்தான் இருக்கிறது. நல்ல மனைவி எண்ணத்தால் கூட கணவனை விட்டு விலகி இருக்கக் கூடாது. மனித வாழ்வின் மகத்துவம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதிலேதான் இருக்கிறது. விட்டுக் கொடுத்தல் எனும் பண்பு குடும்ப வாழ்விற்கு மிகவும் முக்கியமானது என்பதை மனைவியே உணர வேண்டும். மேலும்,


    பெண்கள் எப்பொழுதும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.


    பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கத் துணிவு கொள்ள வேண்டும்.


    பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையில் திருவிளக்கேற்றி வைக்க வேண்டும்.


    பெண்கள் இரவில் விளக்கு வைத்தபின்பு அழக்கூடாது.


    திருமணமான பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.


    சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமத் திலகமிட்டுக் கொள்வது அவசியம்.


    வீட்டிற்கு யாரும் சுமங்கலிகள் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள் இவற்றுடன் குங்குமமும் கொடுக்க வேண்டும்.

    0 comments:

    Post a Comment