Sunday, 29 December 2013

Tagged Under: , , , ,

ஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்! ஒரு டிக்கெட்டுக்கு 65% தள்ளுபடி!!!

By: ram On: 08:22
  • Share The Gag



  • இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதாவது முப்பது நாட்களுக்கு முன் டிக்கட்டுகளை பதிவு செய்த வாடிக்கையாளர் களுக்கு 65 சதவிகிதம் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குகிறது. அதிலும் இதே சலுகையில் இந்நிறுவனம் ஒரு மில்லியன் டிக்கட்டுகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.ஆனால் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


    ஜனவரி மாதத்தின் முற் பகுதியில் பயணக்காலம் முடிவடையும் என்பதால், விமான சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மட்டுமலாமல் பிற்காலத்திலும் இந்த சேவையை பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் பயணக் காலங்களாக இல்லாததால் இந்த நாட்களில் மக்கள் அதிகம் பயணிக்க மாட்டார்கள். இச்சலுகையின் முலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணிகளை கவர திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.


    குறிப்பாக இந்த சலுகையில் வாங்கப்படும் டிக்கட்டுகள் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பதிவு செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணம் செய்வதற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்ச சலுகை விலை வழங்கப்படும்.


    56 விமானங்கள் கொண்ட இந்த விமான நிறுவனம் 40,000 இருக்கைகளை உள்நாட்டு சேவைக்கு பயன்படுத்தி வருகின்றது.


    மற்றொறு சலுகையாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மாடல் திட்டத்தை பயன்படுத்தி பயணிக்கும் மக்களுக்கு 50 சதவிகிதம் சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன் விமான இதழில் தோன்றும் விமான பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இந்த சலுகைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


    ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    0 comments:

    Post a Comment