Sunday, 29 December 2013

Tagged Under:

டிச.15 வரையிலான 2 வாரங்களில் முன்பேர வர்த்தகம் 40 சதவீதம் சரிவு

By: ram On: 16:18
  • Share The Gag



  • டிசம்பர் 15 வரையிலான இரண்டு வாரங்களில் முன்பேர வர்த்தகம் 60 சதவீதம் சரிந்து ரூ.2.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.6.88 லட்சம் கோடியாக இருந்தது.

    தயக்கம்

    கணக்கீட்டு காலத்தில் விளைபொருள் முன்பேர வர்த்தகம் அளவின் அடிப்படையில் மிகவும் குறைந்ததே சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், முன்பேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
    டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் சாதாரண உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம் அதிகபட்சமாக 70 சதவீதம் குறைந்து ரூ.1.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.37,207 கோடியாக சரிவடைந்துள்ளது. தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் 66 சதவீதம் சரிவந்து ரூ.3.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.07 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
    கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான வர்த்தகம் 57 சதவீதம் குறைந்து ரூ.1.50 லட்சம் கோடியிலிருந்து ரூ.65,215 கோடியாக சரிவடைந்துள்ளது. வேளாண் விளைபொருள்கள் மீது ரூ.66,966 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 27 சதவீதம் (ரூ.92,060 கோடி) குறைவாகும்.
    இந்தியாவில், கடந்த 2003–ஆம் ஆண்டின் முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நம் நாட்டில் தற்போது 17 முன்பேர வர்த்தக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் எம்.சி.எக்ஸ், என்.சி.டீ.இ.எக்ஸ், என்.எம்.சி.இ., ஏ.சி.இ., ஐ.சி.இ.எக்ஸ். மற்றும் யூ.சி.எக்ஸ் உள்ளிட்ட ஆறு சந்தைகள் தேசிய அளவில் செயல்படுகின்றன. இதர 11 சந்தைகள் பிராந்திய அளவில் செயல்படுகின்றன.

    கட்டுப்பாட்டு அமைப்பு

    அனைத்து முன்பேர வர்த்தக சந்தைகளும் பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எஃப்.எம்.சி) என்ற கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. முன்பேர சந்தைகளில் ஈட்டப்படும் மொத்த வருவாயில் எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் பங்கு அதிக அளவில் உள்ளது.

    0 comments:

    Post a Comment