Sunday, 22 December 2013

Tagged Under: ,

‘தூம் 3’ தூள் பறக்கிறது..!

By: ram On: 21:01
  • Share The Gag


  • சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

    அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

    ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

    இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

    ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பறக்கிறது

    0 comments:

    Post a Comment