Saturday, 28 December 2013

Tagged Under: ,

இசைஞானி இல்லாமல் கிங் ஆப் கிங்ஸ் 2

By: ram On: 22:02
  • Share The Gag




  •                         இசைஞானி இளையராஜா தலைமையில் இன்று கோலாலம்பூர் மெர்டாக்கா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. கிங் ஆப் கிங்ஸ் 2 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இசைஞானி அறிவித்துள்ளார்.

    கார்த்திக் ராஜா வழங்கும் கிங் ஆப் கிங்ஸ் 2 இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் முக்கியக் கலைஞர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு நேற்று இல்லம் திரும்பிய இளையராஜா, தன்னால் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்று தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால் தன்னால் இவ்விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும், தான் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வேண்டாமென்றும் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    0 comments:

    Post a Comment